இந்தியாவிலும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அமலுக்கு வந்தது கட்டண முறை.. வாட்ஸ்அப் பிளஸின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
WhatsApp Plus Feature Introduced In Indian Users | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், தற்போது வாட்ஸ்அப் பிளஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்ககூடிய முக்கிய மாற்றத்தை வாட்ஸ்அப் செய்துள்ளது. அதாவது, வாட்ஸ்அப் செயலியில் கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் செயலியில் ஏற்பட உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன, இந்த கட்டண முறையில் கிடைக்கும் சிறப்பு அம்சங்கள் என்ன, இந்தியர்கள் எவ்வளவு கட்டணம் விதிக்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் செயலியில் அமலுக்கு வந்த கட்டண முறை
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், புதியதாக வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus) என்ற கட்டண முறையை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் அமலில் உள்ள இந்த கட்டண முறை தற்போது இந்தியாவிலும் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய அம்சத்தால் பயனர்கள் ஏற்கனவே பெற்று வந்த சேவைகளில் எந்த வித சிக்கலும் இல்லை. மாறாக, இந்த வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தில் சில முக்கிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : எக்ஸ் தளத்தில் வீடியோக்களை Reshare, Reupload செய்தால் இனி பணம் இல்லை.. நிறுவனம் முக்கிய நடவடிக்கை!
வாட்ஸ்அப் பிளஸ் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
- நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரத்யேகமான ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.
- பிரீமியம் செலுத்தும் நபர்கள் வாட்ஸ்அப் செயலியில் தீம்-மை மாற்றிக்கொள்ளலாம்.
- வாட்ஸ் அப்பில் உள்ள ஒவ்வொரு சாட்டிற்கும் தனித்தனி ரிங்டோனை செட் செய்துக்கொள்ளலாம்.
- விருப்பமான சாட்களை அதிக அளவில் பின் செய்து வைத்துக்கொள்ளலாம்.
- விருப்பமான ஐகானை தேர்வு செய்துக்கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்படும்.
இதையும் படிங்க : பணப்பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை – அனைத்து வேலைகளையும் செய்யும் ஏஐ
மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த அம்சங்கள் அனைத்தும் இலவசமாக செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு கிடைக்காது. ஒவ்வொரு மாதமும் ரூ.79 கட்டணம் செலுத்தி இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.