AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாகிறதா?.. வெடிக்கும் முன்பு இத பண்ணிடுங்க!

Do This To Protect Your Charger | ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால் அவற்றை சார்ஜ் செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த நிலையில், சார்ஜர்களின் சூடாகும் நிலையில், வெடிப்பதற்கு முன்னதாக அதனை தடுத்து ஆபத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாகிறதா?.. வெடிக்கும் முன்பு இத பண்ணிடுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Jun 2026 16:54 PM IST

மனிதர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக ஸ்மார்ட்போன் (Smartphone) உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் உருவாகும். இந்த நிலையில், ஸ்மார்ட்போன்களை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றால் சார்ஜ் மிகவும் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், நாம் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்கிறோம். அவ்வாறு சார்ஜ் செய்யும்போது சார்ஜர் சூடாகும் சிக்கலை பலரும் சந்திப்பது உண்டு. இதனை பலரும் மிகவும் சாதாரணமாக கடந்து சென்றுவிடுவர். ஆனால், ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாவதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சிக்கல் உள்ளது. அதனை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.

ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாவது ஏன்?

ஸ்மார்ட்போன் சார்ஜர் சூடாவதற்கு பல்வேறு காரணங்கல் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

முக்கிய காரணங்கள் என்ன என்ன?

சார்ஜர் சூடாவதற்கு பல்வேறு அறிவியல் மற்றும் நடைமுறை காரணங்கள் உள்ளன. உதாரணமாக மின்மாற்றம் நடக்கும்போது பிளக்கில் வரும் ஏசி மின்சாரத்தை போன் பேட்டரிக்கு ஏதுவான டிசி மின்சாரமாக மாற்றும்போது இயற்கையாகவே வெப்பம் உண்டாகும். இது இயல்பானது என்றாலும், அதிவேக சார்ஜிங் தொழில்நுட்ப அம்சத்தை பயன்படுத்தும்போது இந்த வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும்.

இதையும் படிங்க : ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் செயலிகளுக்கு Plus அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இதுதவிர தரம் குறைந்த, போலி சார்ஜர்கள் மற்றும் சேதமடைந்த கேபிள்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதும் முக்கிய காரணமாக இருக்கும். மேலும் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துக்கொண்டே பயன்படுத்துவது, அதிக நேரம் கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பது, காற்று இல்லாத பகுதிகளில் சார்ஜ் செய்வது உள்ளிட்டவை சார்ஜர் சூடாவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

சார்ஜர் வெடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?

சார்ஜர் லேசாக சூடாவது சிக்கல் இல்லை. ஆனால், தொடும்போதே சுடும் அளவுக்கு வெப்பமாவது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும். சார்ஜரின் பிளாஸ்டிக் கருகும் வாடை வந்தாலோ அல்லது உள்ளே இருந்து ஏதேனும் விசித்திரமான சத்தம் வந்தாலோ உடனடியாக பிளக்கை அணைத்துவிடுவது பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us