டைமிங் தகராறால் நடுரோட்டில் மோதிய தனியார் பேருந்து ஊழியர்கள்… பயணிகள் அதிர்ச்சி!
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில், 'டைமிங்' பிரச்சினை காரணமாக இரண்டு தனியார் பேருந்து ஊழியர்கள் நடுரோட்டில் வாக்குவாதம் செய்து மோதிக்கொண்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சில பேருந்துகள் பைபாஸ் வழியாக செல்வதால் மாணவர்கள், தொழிலாளர்கள் சிரமப்படுவதாகவும், சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow Us
