தமிழக இடைத்தேர்தல்: அதிமுக- திமுக பொது வேட்பாளர் சீமான்? அரண்டுபோன அரசியல் களம்!
Ambasamudram By Election Seeman : தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளுக்கு விரைவில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளின் எம்எல்ஏக்களான ஜோசப் விஜய், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த தொகுதிகளில் யார் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என ஒவ்வொரு அரசியல் கட்சிகள் சார்பிலும் தீவிர ஆலோசனை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த இசக்கி சுப்பையா அண்மையில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். இதனால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் படிக்க: பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை.. பிரபல கபடி பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு.. வலைவீசிய போலீஸ்!




அதிமுக – திமுக சார்பில் பொது வேட்பாளராக சீமான்
தற்போது, காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிர படுத்தியுள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இவர் போட்டியிடுவது கிட்டத்தட்ட 100 சதவீதம் உறுதி ஆகி உள்ளதாகவே தெரிகிறது.
பிற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியினர் போட்டி
இதே போல, பிற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் அந்தக் கட்சியினர் போட்டியிட உள்ளனர். இருந்தாலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய்க்கு எதிராக சீமானை அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு.. இங்கேயும் சோதனை பண்ணுங்க.. எரியும் நெருப்பில் எண்ணெய் உற்றிய அண்ணாமலை!