AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விழா பேனரில் 2- ஆவது இடம்.. நான்வேனா எழுந்து சென்றுவிடவா? மேடையிலேயே வெடித்து சிதறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி!

Minister Jagadeeswari Angry With Virudhunagar Collector: விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேனரில் முதலில் அமைச்சர் கீர்த்தனா பெயரும், 2- ஆவது அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயரும் இடம் பெற்ற காரணத்தால் ஆத்திரமடைந்த ஜெகீதஸ்வர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விழா பேனரில் 2- ஆவது இடம்.. நான்வேனா எழுந்து சென்றுவிடவா? மேடையிலேயே வெடித்து சிதறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி!
அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Jun 2026 15:52 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சிலம்பம் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ( ஜூன் 26- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமை வகித்து பங்கேற்றார். மேலும், பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில், நிகழ்ச்சிகள் பங்கேற்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் திடீரென அமைச்சர் ஜெகதீஸ்வரி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு கட் அவுட்டில் முதலாவதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. அமைச்சர் ஜெகதீஸ்வரன் பெயர் 2-ஆவதாக இடம் பெற்றிருந்ததே இந்த வாக்குவாதத்திற்கு காரணம் என தெரியவந்தது.

துறைக்கு சம்பந்தமில்லாதருக்கும் முன்னுரிமையா

இதனைக் கண்டு கடும் ஆத்திரமடைந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் நிகழ்ச்சியில் பங்கேற்காத, அதுவும் எனது துறைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒருவரின் பெயரை கட் அவுட்டில் முதலில் போட்டிருப்பது என்ன நியாயம். நான் வேண்டுமானால் எழுந்து சென்று விடவா என்று கேள்வி எழுப்பியதுடன் ஆட்சியருடன் விழா மேடையிலேயே வெளிப்படையாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள் என்று ஏற்கனவே உங்களிடம் பலமுறை அறிவுறுத்தி உள்ளேன்.

மேலும் படிக்க: அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி – நத்தம் விஸ்வநாதனுக்கு முக்கிய பதவி.. எடப்பாடி அடித்த ஆர்டர்!

செய்தி, மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கண்டிப்பு

ஆனால், இதை ஏற்காமல் அதிகாரிகள் தொடர்ந்து தவறு செய்து என்று தெரிவித்ததுடன், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரையும் நேரில் அழைத்து அமைச்சர் ஜெகதீஸ்வரி கடுமையாக கடிந்து கொண்டார். இந்த நிகழ்வு பங்கேற்றவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் பொது நிகழ்ச்சி மேடையில் அரசு பொறுப்பில் இருக்கக்கூடிய அமைச்சர் இவ்வாறு கடுமையாக நடந்து கொண்டதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று பரவலாக பேசப்பட்டது.

விருதுநகர் தவெக அமைச்சர்களுக்குள் உள் கட்சி மோதல்

விருதுநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களுக்குள் ஏற்கனவே உள்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படுகிறது. அதாவது, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கும், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தரப்புக்கும் இடையே மறைமுக மோதல் போக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, அந்த மறைமுக மோதல் பொது நிகழ்ச்சி மேடையில் அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் தமிழக வெற்றிக் கழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்… முதல்வர் விஜய் குறிப்பிட்ட அந்த வார்த்தை.. ஏன் இந்த திடீர் மாற்றம்!

Follow Us