AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் நீடிக்கும் இழுபறி?.. அடுத்தடுத்து ரத்தாகும் இணைப்பு விழா.. பின்னணி என்ன?

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் முன்னிலையில் மட்டுமே தாங்கள் கட்சியில் இணைவோம் என்பதில் விஜயபாஸ்கர் உறுதியாக இருந்தார், அதற்கு தவெக தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவர் தவெக-வில் இணைவது குறித்துப் பல்வேறு தேதிகள் பரவி வந்தன. இருமுறை இதற்கான தேதிகள் குறிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப்போனதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்

விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் நீடிக்கும் இழுபறி?.. அடுத்தடுத்து ரத்தாகும் இணைப்பு விழா.. பின்னணி என்ன?
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Jun 2026 14:16 PM IST

சென்னை, ஜுன் 26: அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவதற்கான தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவர் தவெக கட்சியில் இணைவது தொடர்ந்து தள்ளிப்போய் வருவது அவரது ஆதரவாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தனியாகப் பிரிக்கப்பட்டதிலிருந்து, அங்கிருந்து தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சி. விஜயபாஸ்கர். அண்மையில் நடைபெற்ற மூன்றாவது தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், கிட்டத்தட்ட 63,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தனக்கு அடுத்தபடியாக வந்த தவெக வேட்பாளரைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க: ‘Start Run, Stop Drugs’ ஓட்டம்.. மக்களுடன் இணைந்து மாரத்தானில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்..

விலகலுக்கான காரணம் மற்றும் ராஜினாமா:

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சி.விஜயபாஸ்கர் கடந்த வாரம் தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தனது தொகுதி மக்களிடம் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து நேரில் கருத்து கேட்டார். அப்போது மக்கள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படலாம் என ஒருமனதாகக் கூறியதை அடுத்து அவர் தவெக-வில் இணைய முடிவு செய்தார். இதற்காக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் விஜயபாஸ்கர் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

டெல்டாவை அதிரவைக்கும் மெகா பிளான்:

விஜயபாஸ்கர் தனியாக இணையாமல், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் அதிமுக நிர்வாகிகளைத் திரட்டி தவெக-வில் இணைக்கத் திட்டமிட்டுள்ளார். பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பிரம்மாண்டமாக இணைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சென்னையில் ஒரு தனியார் திருமண மண்டபமும் வாடகைக்கு எடுக்கப்பட்டு, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் முன்னிலையில் மட்டுமே தாங்கள் கட்சியில் இணைவோம் என்பதில் விஜயபாஸ்கர் உறுதியாக இருந்தார், அதற்கு தவெக தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவர் தவெக-வில் இணைவது குறித்துப் பல்வேறு தேதிகள் பரவி வந்தன. இருமுறை இதற்கான தேதிகள் குறிக்கப்பட்டு, பின்னர் தள்ளிப்போனதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்

திடீர் ஒத்திவைப்புக்கான உண்மையான காரணம்:

இந்நிலையில், திட்டமிட்டபடி திங்கள் கிழமை (ஜுன் 29) இந்த இணைப்பு விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அந்த வார தொடக்க நாட்களில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் முக்கிய மாநாடு நடைபெற உள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு, அன்று நடைபெறவிருந்த இணைப்பு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: இனி யாருக்கும் சீட் இல்லைனு சொல்ல முடியாது.. அரசு கல்லூரிகளில் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

அடுத்த தேதி எப்போது?

திங்கள் கிழமை நடக்கவிருந்த விழா தள்ளி வைக்கப்பட்டு, தற்போது வாரத்தின் இறுதி நாளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜுலை 02ஆம் தேதி வியாழக்கிழமை அவர் கட்சியில் இணையலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு, தற்போது இறுதித் தேதி மாற்றப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கானோருடன் டெல்டா மாவட்ட அதிமுகவைச் சரித்து, விஜய்யின் தவெக-வில் ஐக்கியமாகவிருக்கும் விஜயபாஸ்கரின் இந்த நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us