அமோனியா வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம்.. 3 பேர் குழு அதிரடி விசாரணை.. முதல்வரிடம் விரிவான அறிக்கை தாக்கல்!
Ammonia Gas Leak Incident Report: திருவள்ளூரில் அமோனியா கேஸ் கசிவு உயிரிழப்பு விவகாரத்தில் நிபுணர்கள் குழு விசாரணையில் தயார் செய்யப்பட்ட விரிவான அறிக்க முதல்வர் ஜோசப் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீ ஃபுட்ஸ் என்ற தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதில், இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வெளி மாநிலங்களை சேர்ந்த சுமார் 10- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், உடலில் ஆங்காங்கே சிறிய அளவிலான கொப்பளங்களும் தோன்றியது. இதைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் தலைமையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர், பொது சுகாதார கூடுதல் இயக்குனர் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அமைத்து உத்தரவிட்டார்.
முதல்வர் விஜய்யிடம் விரிவான அறிக்கை தாக்கல்
இந்த குழுவானது அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையில் விசாரணை மேற்கொண்டது. இதில், இடைநிலை அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்திருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை ( ஜூன் 25) முதல்வர் ஜோசப் விஜய்யிடம் முழு அறிக்கையை அந்த குழு தாக்கல் செய்துள்ளது.
மேலும் படிக்க: பெரம்பூர் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய்.. நடத்துநருடன் கலந்துரையாடி ஆய்வு!




3 நாள்களில் இறுதி அறி்க்கை தாக்கல் செய்ய உத்தரவு
வாயு கசிவு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்து 24 மணி நேரத்தில் அறிக்கையையும், 3 நாட்களில் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்ட நிலையில், தற்போது இந்த இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் புனித பீட்டர் பால் கடல் உணவு நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் அந்த குழுவானது அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது.
அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 11 பேர் பலி
இந்தச் சம்பவத்தில் சுமார் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பலத்த உடல் பாதிப்புக்கு உள்ளாகிய 63 தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, அமோனியா வாயு கசிவு தொடர்பாக நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: சென்னை தி.நகரில் நடந்த இரட்டை கொலை சம்பவங்கள்.. குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை..