AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள்.. ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் மின்சார மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து..

அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தற்போது அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே இயக்கப்படும் சில மின்சார மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள்.. ஜூன் 27, 28-ஆம் தேதிகளில் மின்சார மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Jun 2026 10:44 AM IST

ஜூன் 25, 2026: அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் வழித்தடம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக அலுவலகங்களுக்கு செல்வோர், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என பலரும் இந்த போக்குவரத்து சேவையின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தற்போது அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே இயக்கப்படும் சில மின்சார மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் அதிரடி ரெய்டு.. மீண்டும் பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத் துறை!!

ஜூன் 27, 2026 (வெள்ளிக்கிழமை)

அரக்கோணத்தில் இருந்து ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  • காலை 4.05, 6.25 மணி – திருத்தணி மின்சார ரயில்கள்
  • காலை 6.50 மணி – சென்னை கடற்கரை மின்சார ரயில்
  • காலை 7.20 மணி, பிற்பகல் 2.50 மணி – வேலூர் பயணிகள் ரயில்கள்
  • காலை 9.15 மணி – திருச்சானூர் பயணிகள் ரயில்
  • காலை 6.00 மணி, இரவு 7.00 மணி – மூர் மார்க்கெட் மின்சார ரயில்கள்
  • காலை 5.50 மணி, மாலை 6.15 மணி – செங்கல்பட்டு மின்சார ரயில்கள்
  • இரவு 9.00 மணி – காட்பாடி பயணிகள் ரயில்

மூர் மார்க்கெட்டில் இருந்து:

  • காலை 7.00 மணி, இரவு 10.00 மணி – அரக்கோணம் பயணிகள் ரயில்கள்
  • காலை 9.00 மணி – திருச்சானூர் பயணிகள் ரயில்

திருத்தணியில் இருந்து:

  • காலை 7.00 மணி – மூர் மார்க்கெட் மின்சார ரயில்
  • காலை 8.50 மணி – சென்னை கடற்கரை பயணிகள் ரயில்
  • இரவு 9.15 மணி, 11.10 மணி – அரக்கோணம் மின்சார ரயில்கள்

பிற ரயில்கள்:

  • காட்பாடி – அரக்கோணம் (அதிகாலை 4.30 மணி)
  • வேலூர் – அரக்கோணம் (காலை 10.00 மணி, மாலை 5.20 மணி)
  • திருச்சானூர் – மூர் மார்க்கெட் (பிற்பகல் 1.30 மணி)
  • திருச்சானூர் – அரக்கோணம் (மாலை 3.40 மணி)
  • செங்கல்பட்டு – அரக்கோணம் (காலை 8.20 மணி, இரவு 8.25 மணி)

மொத்தம்: 27 மின்சார மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

ஜூன் 28, 2026 (சனிக்கிழமை):

அரக்கோணத்தில் இருந்து ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  • காலை 4.05, 6.25 மணி – திருத்தணி மின்சார ரயில்கள்
  • காலை 6.50 மணி – சென்னை கடற்கரை மின்சார ரயில்
  • காலை 9.00 மணி – சென்னை சென்ட்ரல் பயணிகள் ரயில்
  • காலை 9.15 மணி – திருப்பதி பயணிகள் ரயில்
  • பிற்பகல் 2.50 மணி – வேலூர் பயணிகள் ரயில்
  • காலை 5.50 மணி, மாலை 6.15 மணி – செங்கல்பட்டு மின்சார ரயில்கள்

மூர் மார்க்கெட்டில் இருந்து:

  • காலை 7.00 மணி – அரக்கோணம் பயணிகள் ரயில்
  • காலை 9.00 மணி – திருச்சானூர் பயணிகள் ரயில்

பிற ரயில்கள்:

  • திருவண்ணாமலை – தாம்பரம் (அதிகாலை 4.30 மணி)
  • வேலூர் – அரக்கோணம் (காலை 10.00 மணி)
  • திருப்பதி – அரக்கோணம் (மாலை 3.40 மணி)
  • காட்பாடி – அரக்கோணம் (அதிகாலை 4.30 மணி)
  • ஜோலார்பேட்டை – மூர் மார்க்கெட் (காலை 6.05 மணி)
  • திருச்சானூர் – மூர் மார்க்கெட் (பிற்பகல் 3.30 மணி)
  • திருத்தணி – மூர் மார்க்கெட் (காலை 7.00 மணி)
  • செங்கல்பட்டு – அரக்கோணம் (காலை 8.20 மணி)

மொத்தம்: 22 மின்சார மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி நேர ரத்து:

  • ஜூன் 28-ஆம் தேதி சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் 41 மின்சார மற்றும் பயணிகள் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன.
  • சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் வழித்தடத்தில் 7 மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன.

பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே மாற்றிக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Follow Us