AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை தி.நகரில் நடந்த இரட்டை கொலை சம்பவங்கள்.. குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை..

Chennai Double Murder: ஒரே நாளில் தி.நகர் பகுதியில் நடந்த இந்த இரு கொலைச் சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுபோதையில் ஏற்பட்ட தகராறுகள் உயிரிழப்பில் முடிந்துள்ள நிலையில், சம்பவங்களின் பின்னணி குறித்து மாம்பலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் நடந்த இரட்டை கொலை சம்பவங்கள்.. குற்றவாளிகளை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Jun 2026 12:13 PM IST

ஜூன் 25, 2026: சென்னை தி.நகரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறுகளைத் தொடர்ந்து இருவேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புடைய இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (50), தி.நகரில் உள்ள விஜயா மஹால் திருமண மண்டபத்தில் ஹவுஸ் கீப்பிங் பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வெளியே சென்ற அவர், பின்னர் தியாகராய சாலையில் ரத்தக் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி:

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாம்பலம் போலீசார், ராஜேந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மதுபானக் கடையில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து ஒருவர் ராஜேந்திரனை பின்தொடர்ந்து சென்று தாக்கியதும், தாக்குதலில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேந்திரன் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை இடத் தகராறில் ஊழியர் கொலை: 

இதே சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மாம்பலம் போலீசார் விஜயா மஹால் திருமண மண்டபத்திற்கு சென்றபோது, அங்கு பணிபுரிந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் (46) என்பவர் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க: பெரம்பூர் பேருந்தில் ஏறிய முதல்வர் விஜய்.. நடத்துநருடன் கலந்துரையாடி ஆய்வு!

உடனடியாக அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ரவிக்குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்தும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே மண்டபத்தில் பணியாற்றி வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த மணி என்ற சொர்ணகுமார் மீது சந்தேகம் கொண்டு விசாரணை நடத்தினர்.

குற்றவாளி கைது:

விசாரணையில், ரவிக்குமார் வேலை தொடர்பாக அடிக்கடி மணியை திட்டி வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது. சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த மணி, ஆத்திரமடைந்து கட்டையால் ரவிக்குமாரின் தலையில் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மணி என்ற சொர்ணகுமாரை கைது செய்த மாம்பலம் போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

ஒரே நாளில் தி.நகர் பகுதியில் நடந்த இந்த இரு கொலைச் சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுபோதையில் ஏற்பட்ட தகராறுகள் உயிரிழப்பில் முடிந்துள்ள நிலையில், சம்பவங்களின் பின்னணி குறித்து மாம்பலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us