AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவல் நிலைய பெயர்ப்பலகையை மறைத்து தவெக பேனர்.. கோவையில் பரபரப்பு!

காவல் துறையின் அடையாளத்தை மறைத்து வைக்கப்பட்ட இந்த அத்துமீறல் காட்சிகளை, அந்தப் பகுதியைக் கடந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது கைப்பேசியில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன.

காவல் நிலைய பெயர்ப்பலகையை மறைத்து தவெக பேனர்.. கோவையில் பரபரப்பு!
தவெகவினர் வைத்த பேனர்
Sekaran S
Sekaran S | Published: 25 Jun 2026 14:18 PM IST

கோவை, ஜுன் 25: கோவை வடவள்ளி பகுதியில் காவல் துறைக்குச் சொந்தமான புறக்காவல் நிலையத்தின் அதிகாரப்பூர்வ பெயர்ப் பலகையை முற்றிலும் மறைத்து, தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரம்மாண்ட பேனர் வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: “மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்!”.. எ.வ.வேலு வீடுகளில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

காவல் துறை பதாகை மீது பேனர் அத்துமீறல்:

அரசியல் கட்சியினர் பொது இடங்களில் விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், த.வெ.க.வினர் நேரடியாகப் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் நிலையப் பதாகையையே மறைத்து இந்த பேனரை வைத்துள்ளனர். வடவள்ளி பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அந்தப் புறக்காவல் நிலையத்தின் பெயர்ப் பலகை எங்கு இருக்கிறது என்றே தெரியாத அளவுக்கு, கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களின் படங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர் அதன் மீது அப்படியே பொருத்தப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ:

காவல் துறையின் அடையாளத்தை மறைத்து வைக்கப்பட்ட இந்த அத்துமீறல் காட்சிகளை, அந்தப் பகுதியைக் கடந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் தங்களது கைப்பேசியில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றன.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் அதிரடி ரெய்டு.. மீண்டும் பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத் துறை!!

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் ஒரு துறையின் அடையாளப் பலகையையே, ஓர் அரசியல் கட்சி இப்படி அலட்சியமாக மறைக்கலாமா? எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

Follow Us