AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்!”.. எ.வ.வேலு வீடுகளில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் அதே வேளையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ரியாக்ஷன் கொடுத்து, 'மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்' என சவால் விடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்!”.. எ.வ.வேலு வீடுகளில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 25 Jun 2026 11:11 AM IST

சென்னை, ஜுன் 25: திமுகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் இந்த சோதனை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..

முழு ஒத்துழைப்பு – சட்டப்படி எதிர்கொள்வோம்:

“முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி வரும் இந்தச் சோதனைக்கு, அவர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். இந்தச் சோதனையைச் சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தின் மூலம் எ.வ.வேலு தனது நியாயத்தை நிச்சயம் நிரூபிப்பார்” என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கம்:

மேலும் ஆளும் தரப்பைச் சாடிய அவர், “அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி இதுவரை தொடரப்பட்ட எந்தவொரு வழக்கிலும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்தது இல்லை என்பதுதான் வரலாறு. ஆளும் கட்சியினரின் இத்தகைய வெற்று மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி நடுங்கிடும் இயக்கம் திமுக அல்ல. இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் தங்களது அரசியல் வரலாற்றில் பார்த்தவர்கள் திமுகவினர். எனவே, இதையும் நாங்கள் துணிவோடு எதிர்கொண்டு, சட்டத்தின் முன் வெற்றி பெறுவோம்” என மிகவும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

பரபரக்கும் அரசியல் களம்:

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் அதே வேளையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ரியாக்ஷன் கொடுத்து, ‘மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்’ என சவால் விடுத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் அதிரடி ரெய்டு.. மீண்டும் பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத் துறை!!

13 இடங்களில் நடக்கும் சோதனை:

மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனையானது ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லம், திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் உட்பட 13 முக்கிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆவணங்களைச் சரிபார்த்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Follow Us