BREAKING : தவெக அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்திய வீடியோ? பரபரப்பு விளக்கம்!
Tvk Minister Sarathkumar : தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் சரத்குமார் ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டியின் போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது. இது தொடர்பாக அவர் தனது மனைவி, குழந்தையுடன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் தவெக அமைச்சரவையில் மனித வள மேலாண்மை துறை அமைச்சராக இருந்து வருபவர் ஆர். சரத்குமார். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது, அங்கு சரத்குமார் போதை பொருள் உபயோகப்படுத்துவது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், தவெக அமைச்சர் சரத்குமார் செல்போனில் போதை மாத்திரையை வைத்து அதனை பொடியாக நுணுக்கி ஏடிஎம் கார்டு மூலம் அதனை சரி செய்வது போன்ற காட்சிகள் அதில் பதிவாகி உள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் முன்னதாகவே போதைப்பொருள் பயன்படுத்தியதாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.
போதைப் பொருள் வீடியோவுக்கு அமைச்சர் விளக்கம்
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவுக்கு, மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், இன்று வெள்ளிக்கிழமை ( ஜூன் 26) போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் முதல்வர் ஜோசப் விஜய் உடன் பங்கேற்று இருந்தேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சில மணி நேரங்களிலேயே நான் போதை பொருள் உபயோகித்ததாக வீடியோவை வெளியிட்டு அவதூறு பரப்பி உள்ளனர்.




மேலும் படிக்க : மாநகராட்சிகளில் தூய்மைப் பணி தனியார்மயம்.. டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
கில்லி சரத் (D. சரத்குமார்) தமிழக அரசின் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சராக இருக்கிறவரா ?
😳😳😳😳 pic.twitter.com/vx4hBIE1n1
— Mr.D (@DasthuB) June 26, 2026
மாத்திரையை பொடியாக்கி குழந்தைக்கு கொடுத்தோம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக நான், எனது மனைவி மற்றும் குழந்தை ஆகியோருடன் சென்றிருந்தோம். அப்போது, எனது குழந்தை உடல் நலக் குறைவால் மருந்து சாப்பிட அடம் பிடித்தது. இதனால், அந்த மாத்திரையை பொடியாக நுணுக்கி தண்ணீரில் கலந்து குழந்தைக்கு கொடுத்தோம். இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும் ஸ்டேடியத்தில் போதை பொருள் பயன்படுத்துவதாக தவறான முறையில் வெளியிட்டுள்ளனர். இது மிகவும் வருத்தத்துக்குரிய செயலாகும்.
பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி எப்படி. . .
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நான் அமர்ந்திருந்த பகுதியில் என்னை சுற்றியும் ஏராளமான கிடைக்கின்ற ரசிகர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் நான் எப்படி போதை பொருளை உபயோகிக்க முடியும். எனவே, தவறான வீடியோவை சமூகவலைதளங்களில் வைரலாக்கி கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறையை ஒப்படைத்தால், நமது பிள்ளைகள் எப்படி கரை சேர்வார்கள் – நயினார் நாகேந்திரன் கேள்வி..