திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் காணிக்கை ரூ.4.49 கோடி!
4.49 Crores Hundiyal Collection Elumalaiyan Temple | திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில், ஜூன் 24, 2026 அன்று ஒரு நாளில் மட்டும் 4.49 கோடி உண்டியல் காணிக்கை வசூல் செய்யப்பட்டுள்ளது.
திருமலை, ஜூன் 25 : இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4.49 கோடி கிடைத்துள்ளது. நேற்று (ஜூன் 24, 2026) ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நிலையில், இந்த தொகை காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் காணிக்கையாக ரூ.4.49 கோடி கிடைத்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் காணிக்கை ரூ.4.49 கோடி
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. தினம்தோறும் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் சிறப்பு நாட்களில் இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இதையும் படிங்க : சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு; ரங்போ–ரோர்தாங் சாலை போக்குவரத்து துண்டிப்பு
முடி காணிக்கை செலுத்திய 33,356 பக்தர்கள்
அந்த வகையில் இந்த கோயிலில் நேற்று (ஜூன் 24, 2026) பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 86 ஆயிரத்து 21 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர். அதில் சுமார் 33 ஆயிரத்து 356 பக்தர்கள் முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு!
4.08 லட்சமாக பதிவான லட்டு விற்பனை
அன்றைய தினம் பக்தர்கள் ஏராளமான காணிக்கையும் செலுத்தியுள்ளனர். அதாவது, அன்று ஒரு நாள் மட்டும் பக்தர்கள் சுமார் 4 கோடியே 49 லட்சம் பணத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, நேற்று ஒரே நாளில் மட்டும் லட்டு விற்பனை 4.08 லட்சமாகவும், அன்னபிரசாதம் பெற்ற பக்தர்கள் எண்ணிக்கை 2.16 லட்சமாகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.