Viral Video : கேரளா அன்னாசி தோட்டத்தில் மறைந்திருந்த ராட்ச ராஜ நாகம்.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்.. ஷாக் வீடியோ!
Huge King Cobra Hiding In Pineapple Plantation | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அன்னாசி பழம் தோட்டத்தில் ராட்சத ராஜ நாகம் ஒன்று மறைந்திருந்தது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், கேரளாவில் உள்ள அன்னாசி பழம் தோட்டத்தில் மிக நீள ராஜநாகம் ஒன்று மறைந்து இருந்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அன்னாசி தோட்டத்தில் மறைந்திருந்த ராட்ச ராஜ நாகம்
வீடுகளுக்கு அருகே, முட்புதர்களில், காட்டு பகுதிகளில் என மரம் மற்றும் செடி, கொடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அந்த பாம்புகள் அளவில் சற்று சிறியவையாக இருக்கும். பெரிய அளவிலான பாம்புகள் பார்ப்பதற்கே அரிதாக இருக்கும். இந்த நிலையில் தான் கேரளாவில் உள்ள ஒரு அன்னாசி பழம் தோட்டத்தில் மிக நீள ராஜ நாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சிறுவனை எட்டி உதைத்த மனித ரோபோட்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A huge king cobra was rescued from a pineapple plantation in Athirappilly, Kerala. Trained rescuers safely captured the snake and released it back into a suitable forest habitat, highlighting the importance of protecting wildlife and maintaining safe human-animal coexistence…💚… pic.twitter.com/WJL2XjbTqa
— Hasan Arfi (@Hasan_Arfi) June 13, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அன்னாசி பழ தோட்டத்தில் சிலர் எதையோ தேடிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது தோட்டத்திற்கு நடுவே இருந்து சீறிய படி மிக நீளமான ராட்சத ராஜ நாகம் ஒன்று வெளியே வருகிறது. அங்கிருப்பவர்களின் உதவியுடன் வனத்துறையினர் அந்த ராஜ நாகத்தை ஜாக்கிரதையாக பிடிக்கின்றனர். அது ஒரு மனிதனின் நீளம் உள்ளது. அதனை கண்டு அங்கிருக்கும் சிலர் அச்சம் கொள்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.