AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : சிறுவனை எட்டி உதைத்த மனித ரோபோட்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

Humanoid Robot Kicked Child | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மனித ரோபோ ஒன்று சிறுவனை எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : சிறுவனை எட்டி உதைத்த மனித ரோபோட்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jun 2026 21:47 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அவ்வாறு இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள் பேசுபொருளாகவும் மாறும். அந்த வகையில், மனித ரோபோ (Humanoid Robot) ஒன்று சிறுவனின் வயிற்றில் எட்டி உதைப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிறுவனை எட்டி உதைத்த மனித ரோபோ

மனித ரோபோக்கள் அறிவியல் கண்டுபிடிப்பின் ஒரு அங்கமாக இருந்த நிலையில், தற்போது அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாக மாறிவிட்டன. உணவகங்கள், விடுதிகள், பொது நிகழ்ச்சிகள் என பல இடங்களில் இந்த மனித ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவை விட, பல உலக நாடுகளில் இந்த மனித ரோபோக்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தான், நிகழ்ச்சி ஒன்றில் சிறுவனை மனித ரோபோ எட்டி உதைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : வியட்நாம் விமான நிலையத்தில் கப்ரா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நிகழ்ச்சி ஒன்றில் ரோபோ ஒன்று சாகசம் செய்துக்கொண்டு இருக்கிறது. சண்டை போடுவது போல அந்த ரோபோ செய்துக்கொண்டு இருக்கும் நிலையில், அதனை காண கூட்டத்தில் நின்றுக்கொண்டு இருக்கும் சிறுவன் ஒருவரை அந்த ரோபோம் வயிற்றில் எட்டி உதைக்கிறது. வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் கீழே விழுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இளைஞர்கள் மத்தியில் திருமணம் செய்ய தயக்க ஏன்.. முதியவர் சொன்ன முக்கிய காரணங்கள்.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மனித ரோபோக்களால் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்து பலரும் கவலையை வெளிப்படுத்தும் விதமாக கருத்து பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us