AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனயைில் அனுமதி – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பிறந்த நாளுக்காக வழங்கப்பட்ட சாக்லேட்டை சாப்பிட்ட 18 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனயைில் அனுமதி  – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Jul 2026 18:09 PM IST

விழுப்புரம், ஜூலை 3 :  பிறந்த நாளுக்காக வழங்கப்பட்ட சாக்லேட்டை சாப்பிட்ட 18 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 3, 2026 இன்று காலை 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்ததா கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சாக்லெட்டை சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்கள் மருத்துவமனயைில் அனுமதி

அந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வழங்கிய பிறந்த நாள் சாக்லேட் சாப்பிட்ட சக வகுப்பு மாணவர்கள் சில நிமிடங்களிலேயே அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வந்ததும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : தவெக அரசின் ஆணவம் அழிவுக்கு வழி வகுக்கும்.. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

உடனடியாக அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் நச்சுத்தன்மை இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர். இதனையடுத்து மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டன. தற்போது மாணவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர்களது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணமை மேற்கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு வழங்கிய சாக்லேட்டை ஆய்வு செய்த போது அவை ஓராண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. காலாவதியாகி ஓராண்டுகளுக்கு மேலான சாக்லேட்டை கடைகளில் விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சாக்லேட்டை விற்றவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சாக்லேட் போலியானதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் செஞ்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க : மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு.. அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.. எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்..

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகள் முறையான பரிசோதனைக்கு பிறகு வழங்கப்பட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காலாவதியான உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதோடு, உயிருக்கும் ஆபத்துகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர். இதனையடுத்து உணவு பொருட்களை வாங்கும்போது அதன் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி முறையாக அச்சிடப்பட்டிருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறை சோதித்த பிறகே வாங்க வேண்டும் என்றும் காலாவதி தேதி அச்சிடாத உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us