மின் நிறுத்தம் அலர்ட்.. தென்காசி மாவட்டத்தில் நாளை பவர் கட்.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Tenkasi District Power Outage: தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை ஜூலை 4- ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் நாளை சனிக்கிழமை ( ஜூலை 4) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக கோட்ட செயற்பொறியாளர் ஸ்ரீ வனஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி, மேலகரம், குடியிருப்பு, நன்னகரம், காசிமேஜர்புரம், குற்றாலம், அய்யாபுரம், இலஞ்சி, ஆயிரப்பேரி, குத்துக்கல்வலசை, இலத்தூர், மத்தாளம்பாறை, பாட்டப்பத்து, திரவிய நகர், மேலமெஞ்ஞானபுரம், ராமச்சந்திர பட்டணம், கணக்கப்பிள்ளை வலசை, செங்கோட்டை, பிரானூர், பெரிய பிள்ளை வலசை, கற்குடி, வல்லம், தெற்கு மேடு, புளியரை, குலையனேரி, இடையர் தவணை, சுந்தரபாண்டியபுரம், இரட்டைக் குளம், வாடியூர், பாட்டாக்குறிச்சி, கரையாளனூர், ஆனைக்குளம், சாம்பவர் வடகரை, பொய்கை அச்சங்குன்றம், சின்னத்தம்பி நாடானூர், கோவிலாண்டனூர், எம். சி. பொய்கை, கள்ளம்புளி, துரைசாமி புரம் ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்னிருத்தம் செய்யப்படுகிறது.
கடையநல்லூர் பகுதியில் மின் தடை அறிவிப்பு
இதே போல, கடையநல்லூர் கோட்ட மின் செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புளியங்குடி, வீரசிகாமணி துணை மின் நிலையங்களில் நாளை சனிக்கிழமை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, சிந்தாமணி, புளியங்குடி, ராஜகோபாலபேரி, அய்யாபுரம், இந்திரா நகர், ரத்தினபுரி, காடுவெட்டி, புன்னையாபுரம், சங்கனாப்பேரி, சிங்கிலிப்பட்டி, சுந்தரேசபுரம், சிதம்பரப்பேரி, சொக்கம்பட்டி, திருவேட்டநல்லூர், திரிகூடபுரம், முள்ளிகுளம், மேல புளியங்குடி ஆகிய பகுதிகள்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு.. திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது.. உச்சக்கட்ட பரபரப்பு!!




சேர்ந்தமரம்- வேடநத்தம்பட்டி பகுதியில்…
இதேபோல, தலைவன் கோட்டை, மலையடிகுறிச்சி, நகரம் துராசாமியாபுரம், வெள்ளகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. பட்டாடை கட்டி, வீரசிகாமணி, அரியநாயகிபுரம், அருணாச்சலபுரம், வென்றிலிங்கபுரம், பாம்பு கோவில், திருமலாபுரம், திருவேட்டநல்லூர், சேர்ந்தமரம், வேடநத்தம்பட்டி, நடுவக்குறிச்சி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
சங்கரன்கோவில் பகுதியில் மின் நிறுத்தம்
சங்கரன்கோவில் கோட்ட மின் செயற்பொறியாளர் ( பொறுப்பு) ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெருமாள் பட்டி, சங்கரன்கோவில் துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், சங்கரன்கோவில் நகர் பகுதி, களப்பாகுளம், என். ஜி. ஓ. காலனி, புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், பெரும்பத்தூர், மணலூர், வடக்கு புதூர், ராமலிங்கபுரம், பெரும்பத்தூர் ஆகிய பகுதிகள்.
கோவில்பட்டி, வேலாயுதபுரம் பகுதிகளில்
சீவலராயனேந்தல், நகரம் முள்ளிக்குளம், அழகாபுரி, பெருங்கோட்டூர், மாங்குடி, பெருமாள் பட்டி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம் புதூர், செந்தட்டியாபுரம், தென்மலை, எட்டிச்சேரி, இடையான்குளம், அ. சுப்பிரமணியபுரம், கூனங்குளம், ஆசிலாபுரம், முறம்பு, தெற்கு வெங்காநல்லூர், பி.ரெட்டியாபட்டி, வேலாயுதபுரம், சோலைசேரி ஆகிய ஊர்களில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: 7 தொகுதி இடைத்தேர்தல்.. வெளிநாடு புறப்படும் முன் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகம்!