AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

7 தொகுதி இடைத்தேர்தல்.. வெளிநாடு புறப்படும் முன் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, திமுகவின் மாவட்டச் செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். அவரது தலைமையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய திமுக நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயத்தில் திரண்டனர். அங்கு அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, விவாதித்தனர். மு

7 தொகுதி இடைத்தேர்தல்.. வெளிநாடு புறப்படும் முன் திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகம்!
மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Jul 2026 13:16 PM IST

சென்னை, ஜூலை 03: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவிருக்கும் சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் உயர்மட்ட மறுசீரமைப்புக் குழுவுடன் இந்த முக்கிய ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது வரை மொத்தம் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதால், அவற்றுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு.. திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது.. உச்சக்கட்ட பரபரப்பு!!

மதுராந்தகம் தொகுதி காலியானது ஏன்?:

இதில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த மரகதம் குமாரவேல் சமீபத்தில் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் இணைந்தார். இதன் காரணமாகவே மதுராந்தகம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, திமுகவின் மாவட்டச் செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். அவரது தலைமையில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய திமுக நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயத்தில் திரண்டனர். அங்கு அவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தொகுதியின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தவெக-வின் வருகையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதித்தனர்.

மு.க.ஸ்டாலின் வழங்கிய தேர்தல் வியூகங்கள்:

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வரவிருக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இதில் திமுகவின் கரம் ஓங்கியிருக்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். தொகுதி நிர்வாகிகளுடன் பேசிய அவர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, மதுராந்தகம் தொகுதியை மீண்டும் கைப்பற்ற திமுக நிர்வாகிகள் இப்போதிலிருந்தே அடிமட்ட அளவில் கடுமையான தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து, அதற்குத் தகுந்தாற்போல் தேர்தல் வியூகங்களை வகுத்துச் செயலாற்ற வேண்டும்.

வெளிநாட்டுப் பயணத்திற்கு முன் அவசரக் கூட்டம்:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளைய தினம் (ஜூலை 04) வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் வெளிநாடு புறப்படுவதற்கு முன்பாக, இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் மிக முக்கியமான தொகுதியின் நிர்வாகிகளை அவசரமாக அழைத்து இந்த ஆலோசனையை நடத்தியிருப்பது, இத்தேர்தலை திமுக எவ்வளவு தீவிரமாக எதிர்கொள்கிறது என்பதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

மறுசீரமைப்புக் குழுவின் கூட்டம்:

இடைத்தேர்தல் பணிகளுக்கு இணையாக, திமுகவில் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான மறுசீரமைப்புப் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட திமுக மறுசீரமைப்புக் குழு நிர்வாகிகள் நேற்று திமுக தலைவருடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்றும் அண்ணா அறிவாலயத்தில் தங்களது கூட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.

இதையும் படிக்க: “யாரும் செய்யலனா நாங்க செய்வோம்!”.. மதுரையில் திடீரென களம் இறங்கிய பொறுப்பு ஆளுநர்.. நடந்தது என்ன? பரபரப்பு பின்னணி!

இந்த மறுசீரமைப்புக் குழுவில் திமுகவின் மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சக்கரபாணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்று, கட்சியின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் நிர்வாக ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்வது குறித்துத் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

Follow Us