AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக கூட்டணியால் தான் வெற்றி பெற்றேன்; ஆனால்..” – காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் ஓபன் பேச்சு!!

அதிமுகவிலிருந்து விலகுபவர்கள் ஏன் காங்கிரஸுக்கு வராமல் தவெக-விற்குச் செல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசியலில் எப்போதுமே பலரும் அதிகாரத்தை நோக்கித்தான் செல்வார்கள். இன்று தமிழ்நாட்டில் தவெக அதிகாரத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அதிமுகவினருக்கு எப்போதுமே 'லார்ஜர் தன் லைஃப்' என்று சொல்லப்படக்கூடிய ஒரு பிரம்மாண்டமான தலைவருக்குப் பின்னால் இருந்து பழகிவிட்டது.

“திமுக கூட்டணியால் தான் வெற்றி பெற்றேன்; ஆனால்..” – காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் ஓபன் பேச்சு!!
கார்த்தி சிதம்பரம் எம்.பி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 07 Jul 2026 08:46 AM IST

திருப்பத்தூர், ஜூலை 07: அதிமுகவின் மீது நம்பிக்கை இல்லாமல் அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு தாவி வருவது கவலை அளிப்பதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தேர்தல் முடிந்து குறுகிய காலத்திற்குள் மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்வது வாக்காளர்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார். இதுகுறித்து திருபத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், தமிழக அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசும்போது அதிமுக குறித்துத் தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க: வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!

கூட்டணியின் பங்களிப்பு:

நான் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு முறை வெற்றி பெற்றதும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் உதவியால்தான் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். அதே வேளையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்குச் சென்று அடைந்துள்ளது என்பதையும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டிற்கு அதிமுக இருப்பது நல்லது:

“அண்ணா திமுக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். தமிழ்நாட்டிற்கு அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்க வேண்டும். அது ஒரு பாரம்பரியமான கட்சி. இரட்டை இலை சின்னம் என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒரு சின்னம். பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அது. தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கு அந்த கட்சி ஆரோக்கியமாக இருப்பது அவசியமானது” என்று கூறினார். மேலும், அப்படிப்பட்ட அதிமுகவின் தற்போதைய தலைமை, கட்சியின் நடத்தை மற்றும் அடுத்தடுத்து சந்திக்கும் வெற்றி, தோல்விகளைப் பார்த்துவிட்டு சிலர் அங்கிருந்து வெளியே செல்வது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

அதிமுகவினர் தவெக செல்வது ஏன்?

அதிமுகவிலிருந்து விலகுபவர்கள் ஏன் காங்கிரஸுக்கு வராமல் தவெக-விற்குச் செல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலில் எப்போதுமே பலரும் அதிகாரத்தை நோக்கித்தான் செல்வார்கள். இன்று தமிழ்நாட்டில் தவெக அதிகாரத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அதிமுகவினருக்கு எப்போதுமே ‘லார்ஜர் தன் லைஃப்’ என்று சொல்லப்படக்கூடிய ஒரு பிரம்மாண்டமான தலைவருக்குப் பின்னால் இருந்து பழகிவிட்டது. இப்போது அப்படி ஒரு பிரம்மாண்டமான தலைவர் தவெக-வில் இருப்பதனால், ஒரு இயல்பான ஈர்ப்பின் காரணமாக அவர்கள் அங்கே போய் சேர்கிறார்கள்” என்று விளக்கமளித்தார்.

மேலும் படிக்க: சென்னை மாநகராட்சியில் நிதி நெருக்கடி.. முடிக்கப்பட்ட பணிகளுக்கு ரூ.2,000 கோடி நிலுவை.. சொத்து வரி வசூலைத் தீவிரப்படுத்த முடிவு!

தவெக-விற்கு ஆள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை:

மேலும் பேசிய கார்த்தி சிதம்பரம், “தற்போதைய சூழலில் தவெக-விற்குப் புதிதாக யாரும் வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவர்கள் பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அவர்களுக்கு இப்போது இருக்கும் உறுப்பினர்களை வைத்தே ஐந்து ஆண்டுகள் கம்பர்ட்டபிளாக ஆட்சியை நடத்த முடியும். அவங்ககிட்ட இருந்து எந்தவொரு எம்.எல்.ஏ.வும் வெளியே போகப் போவதும் இல்லை, அப்படியே வெளியே போனாலும் மாற்றுத் தரப்பினருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார் [ என்பதுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்துள்ளார்.

Follow Us