“எம்எல்ஏக்களை விலை பேசுவது வெட்கக்கேடானது!”.. குதிரை பேரம் விவகாரத்தில் செங்கோட்டையன் ஆவேசம்!
தன்னிடம் அதிமுக பேரம் பேசியதாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது குறித்துக் கேட்டபோது, "ஆஸ்டின் ஜெயலலிதா காலத்தில் ராஜ்யசபா உறுப்பினராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்துவிட்டுப் பதவிகளை அனுபவித்துவிட்டுச் சென்றவர். இப்போது திமுகவில் தனக்கென ஒரு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே அவர் இத்தகைய பொற்றைக் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார் என்றார்.
சென்னை, ஜூலை 07: சென்னை அண்ணாநகரில் புதுப்பிக்கப்பட்ட நவீன பூங்காவை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநகராட்சி மூலம் ரூ.2 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 12,800 சதுர அடியில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விமான நிலையத்தில் இருப்பதைப் போல உலகத்தரம் வாய்ந்த கழிவறை வசதிகள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. நடைபாதை, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நீரூற்று போன்ற பல வசதிகள் இதில் உள்ளன” என்று பாராட்டிப் பேசினார். தொடர்ந்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குதிரை பேரம் விவகாரம் குறித்து விரிவாகப் பேசினார்.
மேலும் படிக்க: ஆடு திருடிய வழக்கறிஞருக்கு அரசுப் பதவி வழங்கியது நியாயமா முதல்வரே? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
குதிரை பேரம் வெட்கக்கேடானது:
சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசும் விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தலைமறைவாக இருப்பது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆவேசமாகப் பதிலளித்த செங்கோட்டையன், “சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேசுவதும், குதிரை பேரம் நடத்துவதும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிகவும் வெட்கக்கேடான ஒரு விஷயமாகும். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டியவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதில் தவறு செய்த எவராக இருந்தாலும் அவர்களுக்குக் காவல்துறையின் மூலம் உரிய தண்டனை கண்டிப்பாகக் கிடைக்கும்” என்றார்.
திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு மறுப்பு:
தன்னிடம் அதிமுக பேரம் பேசியதாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளது குறித்துக் கேட்டபோது, “ஆஸ்டின் ஜெயலலிதா காலத்தில் ராஜ்யசபா உறுப்பினராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்துவிட்டுப் பதவிகளை அனுபவித்துவிட்டுச் சென்றவர். இப்போது திமுகவில் தனக்கென ஒரு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகவே அவர் இத்தகைய பொற்றைக் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். எங்களுக்குத் தேவையான வலுவான ஆட்சியும், நல்ல கூட்டணியும் இருக்கும்போது, ஆஸ்டின் போன்றவர்களை அழைக்க வேண்டிய தேவையே எங்களுக்கு இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேர வழக்கு.. அடுத்ததடுத்து கைதாகும் நபர்கள்.. திருவல்லிக்கேணி போலீசார் அதிரடி!
ஆளுநரிடம் புகார் அளிப்பது குறித்து:
எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளிப்பது குறித்துப் பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தூய்மையாகவும், நேர்மையாகவும், கண்ணியத்தோடும் செயல்பட்டு வருகிறோம். நம்முடைய தமிழக முதலமைச்சர் அவர்கள் நாள்தோறும் மக்களுக்கான திட்டங்களை உருவாக்கி வருவதால் மக்கள் என்றும் அவர் பின்னால்தான் நிற்கிறார்கள்” என்று கூறினார்.