AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை கொடூரம்.. வடமாநில பெண் நிர்வாண கொலை… சிக்கிய கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

Coimbatore Woman Murder Husband Arrested: கோயம்புத்தூரில் வடமாநில இளம் பெண் நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில், அவர் கொலை செய்ததற்கான பரபரப்பு வாக்கு மூலத்தை அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கொடூரம்.. வடமாநில பெண் நிர்வாண கொலை… சிக்கிய கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
கோவையில் பெண் கொலையில் கணவர் கைது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 06 Jul 2026 20:36 PM IST

கோயம்புத்தூர்– பாலக்காடு சாலை மேற்கு புறவழிச்சாலை பிரியும் பகுதியில் மஞ்சப்பள்ளம் என்ற காட்டுப் பகுதியில் இளம் பெண் நிர்வாண கோலத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பர்ஷா ( 25 வயது) என்பதும், அவரை கொலை செய்தவர் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், பர்ஷாவின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. இந்த தடயத்தின் அடிப்படையில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக சம்பவ இடத்தில் பதிவான செல்போன் சிக்னல்கள் மூலமாக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேலான செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், ஜெகன் பிரதான் என்பவர் பர்ஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், கோவையில் கட்டுமான வேலை பார்த்து வரும் அவர் 10 நாட்களுக்கு முன்பு பர்ஷாவை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்ததும் தெரியவந்தது.

ஆந்திரத்தில் பதுங்கியிருந்த நபர் கைது

ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த ஜெகன் பிரதானை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த 2023- ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக பழகிய இருவர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இருவரும் கோவையில் கட்டுமான தொழிலாளர்களாக ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, பர்ஷா இன்ஸ்டாகிராம் மூலமாக பல்வேறு ஆண்களுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த ஜெகன் பிரதான் அவரை கண்டித்துள்ளார். மேலும், அவர்களுக்கு பர்ஷா நிர்வாண வீடியோக்களையும், வீடியோ காலில் நிர்வாணமாக பேசியும் வந்ததாக தெரிகிறது.

மேலும் படிக்க: பெற்றோர் திட்டியதால் கோபித்து கொண்டு ஓட்டம்.. சென்னையில் மாயமான சிறுவர்களை தேடும் காவல்துறை!

நடு ரோட்டில் உல்லாசத்துக்கு அழைத்ததற்கு மறுப்பு

இதனை ஜெகன் பிரதான் கண்டித்து நிலையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று மஞ்சப்பள்ளம் என்ற பகுதியில் வேலை தேடி சென்ற போது பர்ஷாவை உல்லாசமாக இருப்பதற்கு ஜெகன் பிரதான் அழைத்துள்ளார். அப்போது, சாலையிலேயே உல்லாசத்திற்கு அழைக்கிறாயா என பர்ஷா மறுத்துள்ளார். உனது நண்பர்களிடம் மட்டும் வீடியோ காலில் நிர்வாணமாக பேசுவாயா. என்னுடன் உல்லாசமாக இருக்க மாட்டாயா என்று ஜெகன் கேள்வி எழுப்பியதுடன் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கழுத்தை நெரித்து முள்புதரில் உடல் வீச்சு

இதில், ஆத்திரமடைந்த ஜெகன் பர்ஷாவை தாக்கி கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரை அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக ஆடைகளை அகற்றி உடலை உள்புதரில் வீசியுள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பி சென்றபோது போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: கல்யாண கோலம் மாறுவதற்குள் பரபரப்பு.. மாமனார் வீட்டில் இறக்கிவிடப்பட்ட மனைவி.. காதலியுடன் எஸ்கேப்- ஆன புதுமாப்பிள்ளை!

Follow Us