போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து – பரபரப்பு தகவல்
கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக அரசால் போடப்பட்ட டெண்டரில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக்கூறி அந்த டெண்டர்களை அரசு ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, ஜூலை 7 : கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மாநில முழுவதும் முக்கிய பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்த நிலையில் பேருந்து வாங்கவும், பல்வேறு கருவிகளை வாங்கவும், கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து
- பேருந்து வாங்கவும், பல்வேறு கருவிகளை வாங்கவும் வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து
- போக்குவரத்துக் கழகத்துக்கு 60,000 டயர்கள் வாங்க வெளியிடப்பட்ட டெண்டர் ரத்து
- இருப்பிடம் அறியும் கருவியை பொருத்துதல் பணிக்கான டெண்டர் ரத்து,
- அவசரகால பொத்தான் பொருத்தும் பணிக்கான டெண்டர் ரத்து
- மினி பேருந்துகளுக்கு கூடு கட்டும் டெண்டர் உள்ளிட்ட 5 டெண்டர்கள் ரத்து
இதையும் படிக்க : தமிழகத்தை வாட்டும் வெயில்… நீலகிரியில் கொட்டிய கனமழை…
கடந்த திமுக அரசால் போடப்பட்ட டெண்டரில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக்கூறி அந்த டெண்டர்களை அரசு ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், விரைவில் தவெக அரசு புதிய டெண்டர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு அடுத்த மூன்று மாதங்களில் 2000 புதிய ஏசி மின் பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மின்சார பேருந்துகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. மேலும் இவை மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பேருந்துகளாகவும், ஓட்டுநர்கள் இயக்குவதற்கு எளிமையாக இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விரைவில் புதிய டெண்டர்கள் வெளியிடப்பட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?
இதற்கிடையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன்பார்த்திபன் தலைமையில் மாநகர் போக்குவரத்துத் துறை ஆன்லைன் முன்பதிவு செயலியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் ஜூலை 7, 2026 இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன்பார்த்திபன் தலைமையில் மாநகர் போக்குவரத்துத் துறை ஆன்லைன் முன்பதிவு செயலியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் போக்குவரத்துத் துறை செயலாளர் மா. வள்ளலார், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்த. மோகன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.