IND vs ENG: காயத்தால் வெளியேறிய நிதிஷ் குமார் ரெட்டி.. 2 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய ஆல்ரவுண்டரை களமிறக்கிய பிசிசிஐ!
IND vs ENG ODI Series: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி காயமடைந்தார். தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் நிதிஷ் குமார் ரெட்டி உடற்தகுதி சிக்கல்களை எதிர்கொண்டார், இதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இருந்தும் நிதிஷ் குமார் ரெட்டி விலக்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் (Indian Cricket Team) பிசிசிஐ ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஆகியோரும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளனர். இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி, இந்தத் தொடரில் விளையாட மாட்டார். இதையடுத்து, நிதிஷ் குமார் ரெட்டிக்கு மாற்றாக சிவம் துபேவை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிதிஷ் காயமடைந்ததால், அவரால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாட முடியவில்லை.
ALSO READ: நெருங்கும் ஒருநாள் தொடர்.. இங்கிலாந்தில் காலடி வைத்த ரோஹித்.. வைரலாகும் தீவிர பயிற்சி வீடியோ!




ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி காயமடைந்தார். தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் நிதிஷ் குமார் ரெட்டி உடற்தகுதி சிக்கல்களை எதிர்கொண்டார், இதன் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டி பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இருந்தும் நிதிஷ் குமார் ரெட்டி விலக்கப்பட்டார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் சிவம் துபே:
𝗡𝗼𝘁𝗲: Shivam Dube has been named as a replacement for Nitish Kumar Reddy in the squad for the ODI series against England.
— BCCI (@BCCI) July 6, 2026
சிவம் துபே கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார். துபே இந்திய டி20 அணியில் தொடர்ந்து விளையாடி வந்தாலும், தனது கடைசி ஒருநாள் போட்டியை 2024 ஆகஸ்டில் இலங்கைக்கு எதிராக விளையாடினார். இப்போது, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தபோது, விராட் கோலியின் பங்கேற்பு உடற்தகுதியைப் பொறுத்து அமைந்திருந்தது. இருப்பினும், தற்போது விராட்டின் பெயரிலிருந்து ‘உடற்தகுதியைப் பொறுத்து’ என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 2026 ஜூலை 14 முதல் 2026 ஜூலை 19 வரை நடைபெறும்.
ALSO READ: சஞ்சு சாம்சன் அணியிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டாரா? பிசிசிஐ விளக்கம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் சிங் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா , ஹர்ஷித் ராணா, குர்னூர் ப்ரார், சிவம் துபே