சுவாரஸ்யமான சைபர் க்ரைம் வெப் சீரிஸ் பார்க்கணுமா? ஓடிடியில் வெளியாகி உள்ள இந்த பிரீதம் அண்ட் பெட்ரோ தொடரை மிஸ் செய்யாதீர்கள்
Pritam and Pedro web series streaming on JioHotstar OTT | இந்தி மொழியில் உருவாகி பான் இந்திய மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது பிரீதம் அண்ட் பெட்ரோ என்ற இணையதள தொடர். இது தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ஓடிடியில் தொடர்ந்து படங்கள் வெளியாவது போலவே இணையதள தொடர்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. காமெடி, த்ரில்லர், ஃபேமிலி செண்டிமெண்ட், ரொமாண்டிக் மற்றும் இன்வெஸ்டிகேஷன் என பல்வேறு பாணியில் தொடர்ந்து இணையதள தொடர்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சைபர் கிரைம் காமெரி த்ரில்லர் பாணியில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ள இணையதள தொடர் பிரீதம் அண்ட் பெட்ரோ. இந்தி மொழியில் உருவான இந்த பிரீதம் அண்ட் பெட்ரோ தொடர் கடந்த 3-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த இணையதள தொடரை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதள தொடரின் பான் இந்திய நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
அதன்படி நடிகர்கள் வீர் ஹிரானி, அர்ஷத் வர்சி, விக்ராந்த் மாஸ்ஸி, மோனா சிங், சத்யதீப் மிஸ்ரா, ஸ்ருதி மராத்தே, ராஜேஷ் சர்மா, மோஹித் சவுகான், ஷ்ரேயன்ஷ் கவுரவ், நச்சிகேத் பூர்ணபத்ரே, பாரத் கணேஷ்புரே, நைனா சரீன், ஜெயந்த் கடேகர், அஜய் மதோக், அஜய் ஜாதவ், சந்தீப் ஜாவர், அபூர்வா மெஹ்ரா, கௌரவ் மோர், ஹர்ஷிகா கேவல்ரமணி, வினோத் நாக்பால், அஸ்வின் முஷ்ரன், கேமியோ தோற்றத்தில் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட்டர் சஞ்சய் தத், போமன் இரானி, வீரேந்திர சேவாக் ஆகியோர் நடித்து உள்ளனர்.
பிரீதம் அண்ட் பெட்ரோ இணையதள தொடர் எப்படி இருக்கு?
இந்த தொடரில் கோவாவில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு தனது தாத்தா உடன் புகார் அளிக்க வருகிறார் பிரீதம். அவரது தாத்தாவின் டேப்ரிகார்டர் காணவில்லை என்று புகார் கொடுக்க அங்கு உள்ள காவலர்கள் கடுப்பாகி சண்டையிட்டு வெளியே அனுப்புகிறார்கள். அதற்கு முந்தைய நாள் ஒரு ஏடிஎம் காணாமல் போனதை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள் போலீஸ்காரர்கள்.




ஏடிஎம் முக்கியமா? டேப்ரிக்கார்டர் முக்கியமா என்று ஒரு பிரச்சனை வர பிரீத்தத்தை தூக்கி லாக்கப்பில் அடைக்கிறார்கள் காவலர்கள். அப்போது இந்த ஏடிஎம் தொடர்பான கேஸை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் பெட்ரோ வருகிறார். அவரிடம் பிரீத்தம் தான் அந்த ஏடிஎம்மை கண்டுபிடித்து கொடுத்தால் டேப்ரிக்கார்டரை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்கிறார். அதனைத் தொடர்ந்து பிரீத்தம் கண்டுபிடித்து கொடுக்க அவருக்கும் இன்ஸ்பெக்டர் பெட்ரோவிற்கும் ஒரு நட்பு ஏற்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து அடுத்தடுத்து சைபர் கிரைம் தொடர்பான வழக்குகளை முடிக்கிறார்கள். அதே போல அவர்களுக்கு இடையேயான உறவும் ஆழமாகிறது. இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவதாக உள்ளது. அது தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… பூஜையுடன் தொடங்கியது அனிகா சுரேந்தரின் புதிய படத்தின் ஷூட்டிங்!