முதல்வர் விஜய் கரூர் செல்வதை கண்காணிக்க வேண்டும் – சிபிஐயிடம் திமுக பரபரப்பு புகார்
சமீபத்தில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசியது சர்ச்சையானது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக இரண்டு முக்கிய புகார் மனுமக்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 7 : சமீபத்தில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசியது சர்ச்சையானது. இந்த நிலையில் திமுக அதற்கு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக இரண்டு முக்கிய புகார் மனுமக்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிபிஐயிடம் திமுக பரபரப்பு புகார்
கரூர் விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளநிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியது விசாரணையின் நேர்மையைக் குலைக்கும் வகையில் இருப்பதாகவும் அவரது பேசியது குறித்து விசாரணைக் குழு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி தனது புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : விசில் சத்தம் வலுவாக ஒலிக்கட்டும் – தல தோனிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து




மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஆர்.எஸ்.பாரதி சிபிஐ தலைமையகத்திற்கும் ஒரு பிரத்யேக புகார் மனுவை அனுப்பியுள்ளார். அதில் கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்துகள் மற்றும் குறித்து சிபிஐ தனியாக ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முதல்வர் விஜய் கரூர் செல்வதை சிபிஐ உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், கரூர் பற்றி நாங்கள் பேசும்போதெல்லாம் திமுக ஏன் மிகுந்த கவலையும் அச்சமும் கொள்கிறது என்பதை நீங்கள் அனைவரும் காண முடியும். தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் செல்ல முதல்வர் விஜய்க்கு முழு உரிமை உள்ளது. கரூர் விவகாரம் என்பது எங்கள் வாழ்நாள் துயரம். அங்குள்ள மக்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியினர். அந்தத் துயரத்திலிருந்து நாங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.
இதையும் படிக்க : முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரிய வழக்கு.. கொந்தளித்த உச்சநீதிமன்றம்.. நடந்தது என்ன?
முதல்வர் அங்கு செல்லத் திட்டமிடும்போதெல்லாம், திமுக அதைத் தடுக்க முயற்சிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதையும், கரூர் பயணம் குறித்து நாங்கள் திட்டமிடும்போதெல்லாம் திமுக ஏன் இவ்வளவு அச்சமும் கவலையும் கொள்கிறது என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம். எங்கள் தலைவர் எந்தச் சூழலிலும் கரூரில் காலடி எடுத்து வைத்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர். ஆனால், திட்டமிட்டபடியே எங்கள் தலைவர் சென்று கரூர் மக்களைச் சந்திப்பார் என்றார்