AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு – இதன் சிறப்பம்சங்கள் என்ன? அமைச்சர் அதிரடி தகவல்

வருகிற ஆகஸ்ட் 17, 2026 முதல் நிலம் புதிய ஆன்லைன் பத்திரப்பதிவு மற்றும் எந்த இடத்தில் இருந்தும் பத்திரப்பதிவு முறையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவித்துள்ளார். ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்வதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு – இதன் சிறப்பம்சங்கள் என்ன? அமைச்சர் அதிரடி தகவல்
அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Jul 2026 19:43 PM IST

சென்னை, ஜூலை 7 : வருகிற ஆகஸ்ட் 17, 2026 முதல் நிலம் புதிய ஆன்லைன் பத்திரப்பதிவு மற்றும் எந்த இடத்தில் இருந்தும் பத்திரப்பதிவு முறையை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், பத்திரப்பதிவு துறை முழுமையாக ஆன்லைன் முறையில் மாற்றப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு

முன்பு பத்திரங்களை பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 17, 2026 முதல் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் புதிய டிஜிட்டல் நடைமுறை முழுமையாகச் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தடர்பான அறிவிப்பை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு, இஎஸ்ஐ வசதி – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு

அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

 

அதன்படி இதுவரை நிலம், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு போன்ற சொத்துக்களை பதிவு செய்ய வாங்குபவரும் விற்பவரும் சார்பதிவாளர் அலுவலங்களுக்கு சென்று பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் புதிய ஆன்லைன் இணையதளம் மூலமாக இடைத்தரகர்கள் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன் பத்திரப்பதிவை மேற்கொள்ள முடியும்.

இதையும் படிக்க : போக்குவரத்துத்துறையில் திமுக ஆட்சியில் போடப்பட்ட 5 டெண்டர்கள் ரத்து – பரபரப்பு தகவல்

ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்வதன் சிறப்பம்சங்கள்

  • இந்த புதிய இணையதளம் மூலம் எந்த இடத்தில் இருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யலாம். நீங்கள் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும், எந்தவொரு சார்பதிவாளர் அலுவலக எல்லையின் கீழ் வரும் சொத்தையும் ஆன்லைன் வழியாகவே எளிய முறையில் பதிவு செய்துகொள்ளலாம். மதுரையில் இருந்து கொண்டு திருச்சி பகுதியில் உள்ள இடத்திற்கான பத்திரப்பதிவு செய்து கொள்ள முடியும்.
  • மேலும், ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் டிஜிட்டல் கையெழுத்து முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • பத்திரப்பதிவு வெற்றிகரமாக முடிந்தவுடன், அதற்கான சான்றிதழ்கள் மற்றும் நகல்கள் உடனுக்குடன் விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு பிடிஎஃப் வடிவில் அனுப்பி வைக்கப்படும்.
  • பயனர்கள் தங்களின் அசல் பதிவு ஆவணங்களை எப்போது வேண்டுமானாலும் அரசு இணையதள போர்ட்டலில் இருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Follow Us