AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஆதிராவிடர் நலத்துறை அல்ல… சமூக நீதித்துறை – அதிரடியாக பெயரை மாற்றிய தமிழக அரசு

தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதி துறை என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்து, தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி ஆதிராவிடர் நலத்துறை அல்ல… சமூக நீதித்துறை – அதிரடியாக பெயரை மாற்றிய தமிழக அரசு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 07 Jul 2026 21:03 PM IST

சென்னை, ஜூலை 7 : தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறையை சமூக நீதி துறை என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்து, தமிழக அறசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசின் தலைமை செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ளார். இது தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஆதிராவிடர் நலத்துறை ‘சமூக நீதித்துறை’ என பெயர் மாற்றம்

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பட்டியலின மக்களின் சமூக நீதி மற்றும் உரிமைகளை பாதுகாத்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, தங்கிப் படிக்கும் மாணவர்களுக்காகத் தனியாக அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் மாணவர்/மாணவியர் விடுதிகள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இந்த துறையின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிக்க : “திமுகவுடன் நட்பு தொடர்கிறது.. ஆனால்”.. பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!!

இந்த நிலையில் இதுவரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற அழைக்கப்பட்டு வந்த நிலையில் அதனை சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார். மேலும் அரசு ஆவணங்கள் மற்றும் கோப்புகளிலும் சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றம் செய்ய  விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கௌதம சன்னா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எந்தவிதமான விவாதமும் இல்லாமல், வரலாற்று புரிதலும் இல்லாமல், திடீரென இப்படி ஒரு அறிவிப்பு செய்யும் தைரியம் எப்படி வருகிறது. சட்டமன்றத்திலோ பொதுமக்கள் மன்றத்திலோ முன்னறிவிப்போ, விவாதமோ இல்லாமல் இப்படி ஒரு செயலை செய்வது வரலாற்று திரிபு. ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம் என்று சொன்னவர்கள் கூட கேள்வி கேட்கவில்லை என்பது, தலித் அரசியல் வேகமாக முட்டுச்சந்திற்குப் விரட்டப்படுகிறது என்பதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : குதிரை பேர வழக்கு.. ஆஜராகாத செந்தில் பாலாஜி.. போலீஸ் எடுத்த அடுத்தக்கட்ட அதிரடி முடிவு!!

விசிக தலைவர்களில் ஒருவரான வன்னி அரசு புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற போது அவர் சமூக நீதித்துறை அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தான் ஜூலை 7, 2026 இன்று மனிதவள மேலாண்மைத் துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் மிகுந்த முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Follow Us