AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மீண்டும் ருதுராஜ் அதே தவறு.. கடும் நடவடிக்கை எடுத்த பிசிசிஐ!

CSK Fined: ஐபிஎல் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடைபெற்ற டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரின் 66வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட்டை பராமரித்ததால், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

IPL 2026: மீண்டும் ருதுராஜ் அதே தவறு.. கடும் நடவடிக்கை எடுத்த பிசிசிஐ!
சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 May 2026 14:42 PM IST

5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் ஐபிஎல் 2026 பயணம், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 89 ரன்கள் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. ஐபிஎல் (IPL 2026) வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சந்தித்த மிகப்பெரிய தோல்வி இதுவாகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் துயரங்கள் இத்துடன் முடிவடையவில்லை. ஜிடி – சிஎஸ்கே போட்டி முடிந்த பிறகு, கேப்டன் உட்பட முழு அணிக்கும் பிசிசிஐ ஒரு பெரிய அபராதத்தை விதித்தது. ருதுராஜ் கெய்க்வாடுக்கு 24 லட்சம் ரூபாயும், ஆடும் லெவனில் இடம்பெற்ற அனைத்து வீரர்கள் மற்றும் இம்பாக்ட் வீரர்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் அல்லது அவர்களின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம், இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: வெளியேறிய சென்னை.. 2ம் இடத்தில் குஜராத்.. கெத்தாக வெற்றி பெற்ற சுப்மன் படை!

ஐபிஎல் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக நடைபெற்ற டாடா இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரின் 66வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட்டை பராமரித்ததால், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை விதிமீறல்:

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கின்ஸ் அணியின் இரண்டாவது விதிமீறல் என்பதால் (முதல் விதிமீறல் 18வது போட்டியில் நிகழ்ந்தது) குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22-இன் கீழ் கெய்க்வாடுக்கு ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜிடி – சிஎஸ்கே போட்டி எப்படி இருந்தது?

தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் அடித்து சதக் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து, முகமது சிராஜ் மற்றும் ரஷித் கான் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி, குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைத் தக்கவைத்துக் கொள்ள உதவினர்.

ALSO READ: வெளியேறியது சிஎஸ்கே.. பிளே ஆஃப் அணிகள் என்னென்ன? ஐபிஎல் புள்ளி பட்டியல்!

இந்த வெற்றியின் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி 14 போட்டிகளில் இருந்து 18 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 13 போட்டிகளில் இருந்து 18 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், சிறந்த நிகர ரன் ரேட் காரணமாக முதலிடத்தில் உள்ளனர். இந்தத் தோல்வியின் மூலம், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான சென்னை சூப்பர் கிங்ஸின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் இருந்து 12 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.

Follow Us