IPL 2026: கேப்டனாக மோசமான செயல்பாடு.. லக்னோ கேப்டன் பதவியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட்!
Rishabh Pant: ஐபிஎல் 2026 சீசனில் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டதைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்தத் தகவலை லக்னோ அணி நிர்வாகம் இன்று அதாவது 2026 மே 29ம் தேதி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டதைத் தொடர்ந்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்தத் தகவலை லக்னோ அணி நிர்வாகம் இன்று அதாவது 2026 மே 29ம் தேதி ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியது. முன்னதாக, கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ரிஷப் பண்ட் (Rishabh Pant) தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததாகவும், அந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ALSO READ: வீரர்கள் ஸ்மார்ட் சன்கிளாஸ் தடை.. பிசிசிஐ அதிரடி உத்தரவு.. காரணம் என்ன?




என்ன ஆனது..?
Official announcement. pic.twitter.com/7WeOwpkDr6
— Lucknow Super Giants (@LucknowIPL) May 29, 2026
இதுகுறித்து, லக்னோ கிரிக்கெட் இயக்குனர் டாம் மூடி: “ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான கோரிக்கையுடன் எங்களுடன் அணுகினார். நாங்களும் அதை மிகுந்த மரியாதையுடன் ஏற்றுக்கொண்டோம். இத்தகைய முடிவுகளை எடுப்பது ஒருபோதும் எளிதானதல்ல. கேப்டனாக ரிஷப் பண்ட் லக்னோ அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு (dressing room) அளித்த பங்களிப்புகள் அனைத்திற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இப்போது எங்கள் முழு கவனமும் அணியின் ஒட்டுமொத்த நலன் மீதே உள்ளது. அதாவது, மிகச்சிறந்த தரநிலைகளை எட்டும் வகையில் அணியை மீண்டும் கட்டமைப்பதிலும் மறுசீரமைப்பதிலும் உள்ளது.” என்று தெரிவித்தார்.
லக்னோ அணியிலிருந்து விலகுகிறாரா பண்ட்..?
தற்போதைய அறிவிப்பின்படி, ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியை மட்டுமே துறந்துள்ளார். அதேநேரத்தில், லக்னோ அணியில் ஒரு வீரராக பண்ட் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடுத்த சீசனுக்காகத் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியான பிறகு, ரிஷப் பண்ட் அணியில் நீடிப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
ALSO READ: ஐபிஎல் 2027ல் கேப்டன்களாக யார் இருப்பார்கள்..? செயல்திறன் அடிப்படையிலான விவரங்கள்!
பண்ட் தலைமையிலான லக்னோவின் மோசமான செயல்பாடு
2026 சீசனில் ரிஷப் பண்டின் கேப்டன்சியின் கீழ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மோசமாகச் செயல்பட்டது. ஐபிஎல் 2026 சீசனிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் அணிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஒன்றாகும். லக்னோ அணி தனது 14 லீக் போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று, மீதமுள்ள 10 போட்டிகளில் தோல்வியடைந்தது. புள்ளி அட்டவணையில் 10வது இடத்தைப் பிடித்ததன் மூலம், இந்த சீசனில் லக்னோவின் மிக மோசமான செயல்பாடு பதிவானது.