AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவையில் நண்பன் வீட்டில் கைவரிசை.. 20 பவுன் நகை திருடிய தோழி… வசமாக சிக்கிய 3 பேர் கேங்!

Coimbatore Jewelry Theft : கோயம்புத்தூர் மாவட்டத்தில் நண்பர் வீட்டில் 20 பவுன் நகை திருடியதாக தோழி உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் நண்பன் வீட்டில் கைவரிசை.. 20 பவுன் நகை திருடிய தோழி… வசமாக சிக்கிய 3 பேர் கேங்!
கோவை நகை திருட்டில் 3 பேர் கைது
Sekaran S
Sekaran S | Updated On: 21 Jul 2026 21:54 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை எம். ஜி. ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் உதயன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், தனது மனைவியுடன் வெளியூரில் படித்து வரும் மகளை பார்ப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது, அவரது மகன் நிதீஷ் குமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இவரது நண்பர்கள் ஆன சேக்கல் முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த துர்கா தேவி, அவரது நண்பரான பொள்ளாச்சி நேதாஜி நகரை சேர்ந்த அஸ்கார் அலி உள்ளிட்ட மூன்று பேர் அவரது வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து நிதீஷ் குமாரும், அஸ்கார் அலியும் பேசிக்கொண்டிருந்த போது, துர்கா தேவி மட்டும் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே வந்ததாக தெரிகிறது. அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில், வெளியூர் சென்றிருந்த உதயன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீடு திரும்பினர்.

பீரோவில் இருந்த 20 பவுன் நகை திருட்டு

அப்போது, நிதிஷ் குமார் தான் படித்து வரும் பெங்களூரில் உள்ள கல்லூரிக்கு சென்று விட்டார். இந்த நிலையில், உதயன் தனது வீட்டின் அருகில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 20 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக, பெங்களூரில் உள்ள தனது மகன் சதீஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு உதயன் கேட்டுள்ளார். இதனால், அவரும் அதிர்ச்சி அடைந்து பெங்களூரில் இருந்து கோவைக்கு விரைந்து வந்தார்.

மேலும் படிக்க: சென்னையில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆசை வார்த்தை.. ரூ.63 லட்சத்தை சுருட்டிய மோசடி ஆசாமிகள் கைது!

வால்பாறை காவல் நிலையத்தில் புகார்

பின்னர், இருவரும் நகை காணாமல் போனது தொடர்பாக வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவரான நிதிஷ் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், வீட்டுக்கு வந்து சென்றது யார் என்பது தொடர்பாக தகவல் கேட்டறிந்தனர். துர்க்காதேவி மற்றும் அஸ்கார் அலி வந்து சென்றதை போலீசாரிடம் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

3 பேர் கைது- 20 பவுன் நகை மீட்பு

அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு துர்கா தேவி மற்றும் அஸ்கார் அலியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இருவரும் நகை திருடியதை ஒத்துக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: சென்னையில் பயங்கரம்.. ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை.. 6 பேரை சுற்றி வளைத்து தூக்கிய தனிப்படை!

Follow Us