சென்னையில் பயங்கரம்.. ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை.. 6 பேரை சுற்றி வளைத்து தூக்கிய தனிப்படை!
Chennai Rowdy Murder: சென்னை மாவட்டத்தில் ரவுடியை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. இந்தச் சம்பவத்தில் 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தது.
சென்னை மாவட்டம், ஓட்டேரி எஸ். வி. எம். நகர் ஐ பிளாக்கை சேர்ந்தவர் நாகராஜ் மகன் அஜய் ( 20 வயது). இவர் சம்பவத்தன்று இரவு ஓட்டேரி பகுதியை சேர்ந்த காஜல் என்ற திருநங்கையை பைக்கில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அந்த திருநங்கையை ராமதாஸ் நகர் சி பிளாக்கில் இறக்கி விட்டு விட்டு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது, ராமதாஸ் நகர் பி- பிளாக் அருகே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4-க்கும் மேற்பட்ட கும்பல் அஜய்யை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது. அப்போது, அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இளைஞர் அஜய்யை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த அஜய் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலை கும்பலை கைது செய்த தனிப்படை அமைப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜய்யின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை கும்பலை தேடி வந்தனர். இதில், அந்த கொலை கும்பல் ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் படிக்க: திருப்பூரில் சோகம்… லாரி மோதி தம்பதி துடிதுடித்து உயிரிழப்பு.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்!




ஓட்டேர் பகுதியை சேர்ந்த 6 பேர் கைது
அதன் அடிப்படையில், ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த அதே பகுதி எஸ். வி. எம். நகர் சி- பிளாக்கை சேர்ந்த அருண் என்ற அருண்ராஜ் ( 27 வயது), தனுஷ் ( 22 வயது), சுனில் என்ற சூர்யா ( 20 வயது), தமிழரசன் ( 29 வயது), சிவா ( 23 வயது) மற்றும் 17 வயதுக்குட்பட்ட சிறுவன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முன் விரோதம் காரணமாக நிகழ்ந்த கொலை
இதில், இளைஞர் அஜைய்யை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததை அந்த கும்பல் ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில், 3 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், கொலை செய்யப்பட்ட அஜய் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் சி வகை சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: சென்னையில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆசை வார்த்தை.. ரூ.63 லட்சத்தை சுருட்டிய மோசடி ஆசாமிகள் கைது!