நள்ளிரவில் சாவகாசமாக உலா வந்த சிறுத்தை.. சிசிடிவி வீடியோவால் உறைந்த கிராம மக்கள்!
Coimbatore Leopard Scare: கோவை அன்னூர் அடுத்த கோவில்பாளையம் கௌசிகா நதிக்கரையோரம் உள்ள விவசாயத் தோட்டத்தில், நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று இரை தேடி உலா வரும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காலையில் கேமரா பதிவுகளைப் பார்த்த விவசாயி அதிர்ச்சியடைந்து அதனை இணையத்தில் பகிரவே, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே நள்ளிரவில் விவசாயத் தோட்டத்திற்குள் சிறுத்தை ஒன்று சாவகாசமாக உலா வரும் கண்காணிப்புக் கேமரா காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளை வேட்டையாடும் முன்பாக வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்துச் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow Us
