AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கே அணிக்கு வரும் ஹர்திக் பாண்ட்யா..? முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன ரகசியம்!

Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவுடன் பிரிந்து செல்ல ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. ஹர்திக்கின் தலைமையில் அணியின் செயல்பாடு மோசமடைந்ததாலும், அணிக்குள் தகராறுகள் வெளிப்பட்டதாலும், மும்பை அணி நிர்வாகம் தற்போது புதிய மாற்று வழிகளைப் பரிசீலித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது வீரர்களின் பிம்பத்தை மேம்படுத்துவதில் பெயர் பெற்ற ஒரு அணியாகும்.

IPL 2026: சிஎஸ்கே அணிக்கு வரும் ஹர்திக் பாண்ட்யா..? முன்னாள் சிஎஸ்கே வீரர் சொன்ன ரகசியம்!
ஹர்திக் பாண்ட்யா - சென்னை சூப்பர் கிங்ஸ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2026 08:00 AM IST

ஐபிஎல் உலகில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தற்போது ஒரு பெரிய திருப்பத்தை எடுத்துள்ளன. நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026), 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி அட்டவணையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. கடந்த 2024ம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டன்ஷி வழங்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மேலும், மும்பை அணியின் மோசமான செயல்பாடு இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்தது. தற்போது, ​​முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், ஹர்திக் பாண்டியாவின் வர்த்தக பரிமாற்றம் குறித்து பேசியுள்ளார்.

ALSO READ: மும்பையுடன் உறவை முறித்துக்கொண்ட ஹர்திக்..? கிடைத்த முக்கிய தகவல்!

சுப்பிரமணியம் பத்ரிநாத், தனது யூடியூப் சேனலில் பேசுகையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகளுக்கு இடையே முக்கிய பரிமாற்றம் நடைபெறலாம். மும்பை அணி ஹர்திக்கை அணியிலிருந்து விடுவிக்க விரும்பினால், அந்த அணி நேரடியாக சென்னை சூப்பர் கிங்ஸுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என தெரிவித்தார். இதுகுறித்து பேசிய பத்ரிநாத், “நான் மும்பை இந்தியன்ஸின் இடத்தில் இருந்திருந்தால், ஹர்திக் பாண்டியா சென்னைக்கு அனுப்பப்பட்டிருப்பார், அதற்குப் பதிலாக சிவம் துபே மற்றும் இளம் வீரர் ஆயுஷ் மத்ரே ஆகியோர் மும்பை அணியில் சேர்க்க விரும்புவேன்” என்றார்.

சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவி மாறுமா?

பத்ரிநாத் கூற்றுப்படி, ஹர்திக் பாண்டியா சென்னைக்கு வந்தால், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய மூவர் கூட்டணி, சென்னை அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். இதில், சஞ்சு சாம்சனைத்தான் கேப்டனாக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. ஹர்திக் கேப்டன் பதவியைக் கோரினால், அவரை கேப்டனாக்குவதில் சென்னை அணிக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது. ஏனெனில், ஹர்திக் பாண்டியாவுக்கும் எம்.எஸ். தோனிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. ஹர்திக்கிடம் இன்னும் குறைந்தது 3 சீசன்களாவது விளையாடும் திறன் இருப்பதாகவும், அவரால் சென்னை அணிக்கு ஒரு சிறந்த சமநிலையை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை வெளியேற்றுமா?

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவுடன் பிரிந்து செல்ல ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. ஹர்திக்கின் தலைமையில் அணியின் செயல்பாடு மோசமடைந்ததாலும், அணிக்குள் தகராறுகள் வெளிப்பட்டதாலும், மும்பை அணி நிர்வாகம் தற்போது புதிய மாற்று வழிகளைப் பரிசீலித்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது வீரர்களின் பிம்பத்தை மேம்படுத்துவதில் பெயர் பெற்ற ஒரு அணியாகும். எனவே, சென்னைக்கு மாறுவது ஹர்திக்கிற்கும் ஒரு நல்ல தேர்வாக அமையக்கூடும்.

ALSO READ: கேப்டனாக மோசமான செயல்பாடு.. லக்னோ கேப்டன் பதவியிலிருந்து விலகிய ரிஷப் பண்ட்!

இந்த வர்த்தகம் நடந்தால், இது ஐபிஎல் வரலாற்றிலேயே மிகப்பெரிய வர்த்தக பரிமாற்றமாக இருக்கும். மும்பை அணிக்கு, வேகப்பந்து வீச்சாளரான சிவம் துபேவும், வளர்ந்து வரும் மும்பை வீரரான ஆயுஷ் மத்ரேவும் செல்வார்கள். மறுபுறம், சென்னை அணிக்கு அனுபவமிக்க ஆல்-ரவுண்டரும், வருங்கால கேப்டனுமான ஹர்திக் பாண்டியா கிடைப்பார். இனிவரும் நாட்களில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுகுறித்து என்ன முடிவு எடுக்கின்றன என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

Follow Us