உலக புகழ் பெற்ற சுற்றுலா தளத்தில் சோகம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!
Stampede at Haitian Mountain Top | உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக வடக்கு ஹைதியும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், இங்கு மலை மீது கட்டப்பட்டுள்ள கோட்டையை சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளனர்.
போர்ட் அவ் பிரின்ஸ், ஏப்ரல் 13 : வடக்கு ஹைதியில் (Haiti) உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலா தளத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வார விடுமுறை தினமான நேற்று (ஏப்ரல் 12, 2026) ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகம் கூடிய நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக புகழ் பெற்ற சுற்றுலா தளத்தில் ஏற்பட்ட விபத்து
கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஹைதியும் ஒன்றாக உள்ளது. இந்த நாட்டில் உள்ள மலைகள், கடற்கரைகள், பாரம்பரிய சின்னங்கள் ஆகியவற்றை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். குறிப்பாக வடக்கு ஹைதியின் மிலார் நகரில் மலை மீது சீடடெல் ஹென்றி என்ற லபெரியர் கோட்டை ஒன்று அமைந்துள்ளது. ஹைதி, பிரான்ஸ் இடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, புரட்சியாளர் ஹென்றி கிறிஸ்டோப் முயற்சியில் இந்த கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.
இதையும் படிங்க : நொடி பொழுதில் 17 ஏக்கர் நிலப்பரப்பு காலி ஆகிவிடும்.. மிகவும் அபாயகரமான கிளஸ்டர் பாம் ஏவுகணைகளை சோதனை செய்யும் வடகொரியா!
30 பேர் பலியான நிலையில், ஏராளமானோர் படுகாயம்
உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமாக திகழும் இந்த மலைக்கோட்டையை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவர். அந்த வகையில், நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சற்று கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதற்கிடையே திடீரென மழை பொழிய தொடங்கியுள்ளது. இதனால், மழையில் நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.
இதையும் படிங்க : ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி.. மீண்டும் பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
ஒட்டுமொத்த சுற்றுலா பயணிகளும் ஒரே நேரத்தில் ஓட தொடங்கிய நிலையில், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாபமாக பலியான நிலையில், ஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.