AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி.. மீண்டும் பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Trump's New Tariff Announcement | ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு ராணுவ ரீதியில் உதவும் நாடுகள் மீது 50 சதவீதம் இறக்குமதி வரி உடனே அமலுக்கு வர உள்ளதாக கூறியுள்ளார்.

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி.. மீண்டும் பகீர் கிளப்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Apr 2026 08:26 AM IST

வாஷிங்டன், ஏப்ரல் 09 : ஈராணுக்கு (Iran) அணு ஆயுதங்களை வழங்கும் எந்த ஒரு நாட்டின் மீது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்கள் மீதும் உடனடியாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளார். இதில் எந்த வித வரி விலக்கோஅல்லது சலுகையோ வழங்கப்பட மாட்டாது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஈரானுக்கு உதவும் நாடுகள் குறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீதான போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மிக கடுமையான போர் நிலவி வந்தது. இதன் காரணமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடிய நிலையில், அதனை திறக்க வேண்டும் என டொனால்ட் டிரம்ப் கூறி வந்தார். ஆனால் அவற்றுக்கெள்ளால், ஈரான் செவி மடுக்காத நிலையில், 48 மணி நேர கடைசி கெடு விதித்து ஈரானை மிக கடுமையாக தாக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.

இதையும் படிங்க : போர் நிறுத்தம்.. ட்ரம்ப் சொன்ன ஹேப்பி நியூஸ்.. சரசரவென விலை குறைந்த கச்சா எண்ணெய்!

இந்த நிலையில், கெடு முடிவடைவதற்கு முன்பு இந்த விவகாரத்தில் தலையிட்ட பாகிஸ்தான், ஈரானுக்கு கூடுதலாக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியது. அதற்கு ஒப்புதல் தெரிவித்த டிரம்ப், ஈரான் மீது இரண்டு வாரங்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று அறிவித்தார்.

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50 சதவீதம் வரி – டிரம்ப் அறிவிப்பு

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள டிரம்ப், ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும். இதற்கு எந்த விலக்கும் அளிக்கப்படமாட்டாது. ஈரானின் பாதுகாப்பு விநியோக சங்கிலியை துண்டிப்பதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஈரான் மீதான தாக்குதல் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்!

டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவி ஏற்றது முதலே பல்வேறு உலக நாடுகளின் மீது புதிய வரி விதிப்புகளை அமல்படுத்தி வரும் நிலையில், டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஈரானுக்கு ரஷ்யா, சீனா, வட கொரிய ஆகிய நாடுகள் ராணுவ ரீதியிலான உதவிகளை செய்து வரும் நிலையில், இந்த நாடுகளின் மீது வரி விதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Follow Us