AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஈரான் மீதான தாக்குதல் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்!

Trump Accepted Temporary Ceasefire With Iran | ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் தலையிட்டி டிரம்பிடம் கோரிக்கை வைத்த நிலையில், போர் குறித்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல் 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்!
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Apr 2026 06:51 AM IST

வாஷிங்டன், ஏப்ரல் 08 : ஈரான் (Iran) மீது அமெரிக்கா (America) மற்றும் இஸ்ரேல் (Israel) தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் (America President Donald Trump) ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறக்க டிரம்ப் ஈரானுக்கு, 48 மணி நேர கெடு விதித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வந்த இஸ்ரேல், அமெரிக்கா

அணு ஆயுதங்களை தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 28, 2026 முதல் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தில் வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதன் காரணமாக உலக நாடுகள் மிக கடுமையான கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளன.

இதையும் படிங்க : மே 31 வரை இஸ்ரேலுக்கு விமான சேவை ரத்து.. ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது, உலக நாடுகளை மிக கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், ஹோர்முஸை திறக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், அந்த எச்சரிக்கைகளுக்கு ஈரான் செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான், ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடு விதித்திருந்தார். அதற்கு ஈரான் ஒப்புதல் அளிக்காத நிலையில், நேற்று (ஏப்ரல் 07, 2026) ஒரு நாகரிகம் அழியும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாகிஸ்தான் தலையிடல் மூலம் தற்காலிக போர் நிறுத்தம்

டிரம்பின் இறுதி எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் பிரதமர்  ஷெபாஸ் ஷெரீஃப், ஈரானுக்கு விதிக்க காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ஈரான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், ஈரான் மீதான தாக்குதல்களைம் இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். இது இரு தரப்பு போர் நிறுத்தமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us