AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிபிஎஃப் திட்டத்தில் வட்டியை முறையாக பெற இது முக்கியம்.. முழு விவரம் இதோ!

Public Provident Fund Scheme Investment | அரசு பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பலரும் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், இந்த திட்டத்தில் மாதம் மாதம் முறையாக வட்டி பெற வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்தை பின்பற்ற வேண்டும்.

பிபிஎஃப் திட்டத்தில் வட்டியை முறையாக பெற இது முக்கியம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 May 2026 18:33 PM IST

பொதுமக்களின் நலனுக்காக அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி (PPF – Public Provident Fund) திட்டம். பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த திட்டம் கொண்டுள்ளதன் காரணமாக பலரும் முதலீடு செய்கிறன்றனர். இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முறையாக வட்டி பெற வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்தை முறையாக செய்ய வேண்டும். இந்த நிலையில், பிபிஎஃப் திட்டத்தில் முறையாக வட்டி பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் சிறப்புகள்

பிபிஎஃப் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கும் அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கும் வரி இல்லை. இதன் காரணமாக தான் பலரும் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்த ஒரு விஷயத்தை செய்தால் மட்டும் தான் உங்களால் முறையாக வட்டியை பெற முடியும். அதாவது, ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்பது தான் அது.

இதையும் படிங்க : இந்தியாவில் இந்த மாநிலத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்.. எங்கு தெரியுமா?

5 ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் – காரணம் என்ன?

பிபிஎஃப் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி முதலீட்டாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை வட்டி வரவு வைக்கப்பட்டாலும், மாதத்திற்கு ஒருமுறை இந்த திட்டத்தில் வட்டி வரவு வைக்கப்படும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த மாதத்திற்கான வட்டி வரவு வைக்கப்படும்.

இதையும் படிங்க : இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்? ஆர்பிஐயின் அதிரடி திட்டம்

ஒருவேளை 5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால் அடுத்த மாதத்திற்கு தான் வட்டி வரவு வைக்கப்படும். உதாரணமாக ஜூலை மாதம் 6 ஆம் தேதி பணத்தை டெபாசிட் செய்தால் ஆகஸ்ட் மாதம் தான் வட்டி வரவு வைக்கப்படும். எனவே ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதி பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம் அந்த அந்த மாதத்திற்கான வட்டியை பெற முடியும்.

Follow Us