இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்? ஆர்பிஐயின் அதிரடி திட்டம்
.காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்தியாவில பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் காகித நோட்டுக்களை போல அல்லாமல் நீண்ட காலம் நீடிக்கும்.
இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டத்தின் சாத்திய கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் இந்த திட்டத்தை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.காகித ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான அளவில் கிழிந்த, மோசமான ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்?
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் என்பது சாதாரண காகித நோட்டுகளைப் போல இல்லாமல், சிறப்பு வகை பாலிமர் எனப்படும் மெல்லிய பிளாஸ்டிக் பொருளில் தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகளாகும்.இது ஏடிஎம் கார்டுகளை போல கடினமாக இல்லாமல் வழக்கமாக நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்களை போல மடக்கி பயன்படுத்தலாம்.
இதையும் படிக்க : உங்களுக்கே தெரியாமல் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையுதா?.. இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்!




பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் காகித நோட்டுக்களை போல அல்லாமல் நீண்ட காலம் நீடிக்கும். இந்த வகை ரூபாய் நோட்டுக்கள் தண்ணீரில் நனைந்தால் பாதிக்கப்படாது, மேலும் கிழிவதற்கான வாய்ப்புகள் குறைவு, மேலும் அழுக்கு படியாமல் நீண்ட காலம் பயன்படுத்தலாம், இதனால் போலி நோட்டுக்கள் தயாரிப்பது சவாலானதாக மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் இது மைக்ரோ ஹோலோகிராம் மற்றும் சிறப்பு மை போன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இடம் பெறும் என கூறப்படுகிறது.
கடந்த 2025 நிதியாண்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கான செலவு ரூ. 6,372.8 கோடியாக இருந்தது. இதுவே கடந்த 2024 நிதியாண்டில் ரூ.5,101.4 கோடியாக இருந்தது.ஒரே ஆண்டில் ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவதற்கான செலவு ரூ.1000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு காரணமாக காதித ரூபாய் நோட்டுக்கள் சேதமடைந்து வருவது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 23.8 பில்லியன் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 12.3 சதவிகிதம் அதிகம் என கூறப்படுகிறது. குறிப்பாக ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகள்தான் அதிகளவில் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தவிர்க்க கடந்த 2012ஆம் ஆண்டே மத்திய அரசு ரூ.10 மதிப்புள்ள பாலிமர் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக கொச்சி, மைசூர், ஜெய்பூர், புவனேஸ்வர் மற்றும் ஷிம்லா ஆகிய நகரங்களில் ஒரு பில்லியன் நோட்டுக்களை சோதனை அடிப்படையில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் ஏடிஎம் இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் மக்களுக்கு இருந்த சந்தேகம் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிக்க : எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம்.. புதிய அம்சங்கள் என்ன என்ன?
ஆனால் தற்போது அந்த தொழில்நுட்ப பிரச்னைகள் அனைத்தம் சரி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் 60க்கும் மேற்பட்ட நாடுகள் பாலிமர் நோட்டுக்களை பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, நியூசிலாந்து, வியாட்நாம், ருமேனியோ போன்ற நாடுகளில் இந்த வகை பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆரம்பத்தில் ரூ.10 மற்றும் ரூ.20 ரூபாய் நோட்டுகள் பரிசோதனை அடிப்படையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது வெற்றியடைந்தால் மற்ற ரூபாய் நோட்டுக்களும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது