ரூ.2 லட்சத்திற்கு வட்டி மட்டுமே ரூ.90,000.. அசத்தல் லாபம் தரும் அஞ்சலக டைப் டெபாசிட் திட்டம்!
Post Office Time Deposit Scheme | அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இந்த அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டுமே ரூ.90,000 பெற முடியும்.
மாதிரி புகைப்படம்
- பொதுமக்கள் முதலீடு செய்து அதிக லாபம் பெற அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் இந்த அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக மட்டுமே ரூ.90,000 பெற முடியும். இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்து லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- நிலையான வைப்பு நிதி திட்டம் எவ்வாறு செயல்படுகிறதோ அதேபோல தான் இந்த அஞ்சலக டைம் டெபாசிட் திட்டமும் செயல்படும். அதாவது, இந்த திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். பிறகு தேர்வு செய்யப்பட்ட காலத்திற்கு தொடர்ந்து வட்டி வரவு வைக்கப்படும். இவ்வாறு தான் இந்த இரண்டு திட்டங்களும் செயல்படும்.
- நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு வழங்குவதை போலவே இந்த டைம் டெபாசிட் திட்டத்திற்கும் அஞ்சலகங்களில் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் ஆகிய கால அளவீடுகளை கொண்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் உங்களுக்கு சிறந்தது என தோன்றும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
- இந்த திட்டத்திற்கு ஆண்டு அடிப்படையில் 6.9 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வெறும் ரூ.1,000 முதலே முதலீடு செய்ய முடியும். இதில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இந்த நிலையில், ஒருவர் இந்த திட்டத்தில் 5 ஆண்டுகள் திட்டத்தை தெர்வு செய்து ரூ.2 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
- அதற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், திட்டத்தின் முடிவில் வட்டியாக மட்டுமே ரூ.89,990 கிடைக்கும். அதாவது மொத்தமாக சேர்த்தால் முதலீடு செய்த தொகை ரூ.2 லட்சம் மற்றும் அதற்கான வட்டி தொகை ரூ.90,000 என சேர்த்து திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.2,90,000 கிடைக்கும்.
Follow Us




