AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம்.. புதிய அம்சங்கள் என்ன என்ன?

UIDAI Introduced New Aadhaar App | ஆதார் தொடர்பான முக்கிய நடவடிக்கைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய ஆதார் கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எம் ஆதார் கார்டுக்கு பதிலாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம்.. புதிய அம்சங்கள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 May 2026 19:18 PM IST

இந்தியாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், அரசின் சேவைகளை பெறுவது வரை என பலவற்றுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான், ஆதார் தொடர்பான சேவைகளை பெற அரசு எம் ஆதார் (mAadhaar) என்ற செயலியை அறிமுகம் செய்தது. இதனை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது புதிய ஆதார் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன செயலி, அதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம்

ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, பாலினம், வயது, புகைப்படம் உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தகவல்களில் சில மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலும் சிலருக்கு ஆதார் கார்டில் விவரங்கள் தவறாக இடம்பெற்றிருக்கும். இவ்வாறு தவறாக உள்ள தகவல்களை திருத்துவது, பழைய தகவல்களை அப்டேட் செய்வது உள்ளிட்டவற்றுக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளம் உள்ளது.

இதையும் படிங்க : இறந்த நபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது குற்றம்?.. விதிகள் கூறுவது என்ன?

இந்த நிலையில், பொதுமக்கள் மிக எளிதாக சேவைகளை பெறும் வகையில் எம் ஆதார் என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை பலரும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தான், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, விரைவாக செயல்படக்கூடிய புதிய ஆதார் செயலியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஆதார் செயலியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

  • இந்த செயலி பொதுமக்கள் தங்களது ஆதார் விவரங்களை உறுதி செய்ய QR Code, Face ID Authentication ஆகிய அம்சங்களை பயன்படுத்த அனுமதி வழங்குகிறது.
  • இந்த செயலி மூலம் எங்கு சென்றாலும் ஆதார் கார்டை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்த செயலி, பொதுமக்கள் குறிப்பிட்ட தகவல்களை மட்டும் பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா?.. இந்த 5 அப்டேட்டுகளை செய்ய வேண்டியு கட்டாயம்!

இந்த புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் காரணமாக, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் எம் ஆதார் செயலி விரைவில் செயல்படாமல் போக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us