AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி mAadhaar செயலி செயல்படாது.. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சொன்ன முக்கிய செய்தி!

mAadhaar App Will Not Be Available Soon | ஆதார் கார்டு தொடர்பான பல்வேறு புதிய புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பழைய எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.

இனி mAadhaar செயலி செயல்படாது.. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சொன்ன முக்கிய செய்தி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 May 2026 23:37 PM IST

பழைய எம் ஆதார் செயலி (mAadhaar App) விரைவில் செயல்படாமல் போகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் சேவைகளை ஸ்மார்ட்போன்கள் மூலமே வழங்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது. தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) மேற்கொண்டு வரும் நிலையில், இந்த முக்கிய முயற்சியில் இறங்கியுள்ளது.

முக்கிய அடையாள ஆவணமாக இருக்கும் ஆதார் கார்டு

இந்தியர்களுக்கான மிக முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு (Aadhar Card) உள்ளது. ஆதார் கார்டில் ஒரு தனிப்பட்ட நபரின் பெயர், முகவரி, 12 இலக்க எண், கைரேகை, புகைப்படம், வயது, பாலினம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் இருக்கும். இதில் இருக்கும் விவரங்கள் மற்ற ஆவணங்களிலும் ஒத்துப்போக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இல்லை என்றால் சில விஷயங்களை செய்து முடிப்பதில் சிக்கல் ஏற்படும்.

இதையும் படிங்க : இந்தியாவில்தான் விலை கம்மி.. எண்ணெய் நெருக்கடியை சமாளிக்கும் இந்தியா.. மற்ற நாடுகளின் ஒப்பீடு!

இதற்காக பலரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி வந்தனர். பின்னர் பொதுமக்கள் எளிதாக சேவைகளை பெறும் வகையில் எம் ஆதார் என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இணையதளம் மூலம் செய்யகூடிய வேலைகளை பொதுமக்கள் இந்த செயலி மூலம் செய்து வந்தனர். இந்த நிலையில் தான், தற்போது மேலும் ஒரு புதிய செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது.

இனி எம் ஆதார் செயலி பயன்பாட்டில் இருக்காது

ஆதார் தொடர்பான சேவைகளை பெற எம் ஆதார் செயலி பயன்பாட்டில் இருந்த நிலையில், விரைவில் அந்த செயலி பயன்பாட்டில் இருந்து எடுக்கப்படும் என்றும் விரைவில் புதிய ஆதார் செயலி அறிமுகம் செய்யப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. எம் ஆதார் செயலிக்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஆதார் செயலி, அதிக தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு இருப்பதாகவும் எனவே பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us