AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jul 2026 06:25 AM IST

ஜூலை 18, 2026: தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 7.6 கிலோமீட்டர் உயரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, வடதமிழகம், தெற்கு உள்கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது.

ஜூலை 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு:

இதன் காரணமாக, ஜூலை 18ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பழனி நில மோசடி வழக்கு.. சிசிடிவி காட்சிகளை முடக்கி சிபிசிஐடி தீவிர விசாரணை!!

ஜூலை 19ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஜூலை 23ஆம் தேதி வரை தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

100 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை?

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்தாலும், வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகக்கூடும்.

மேலும் படிக்க: பிறந்த குழந்தையைப் பார்க்க லஞ்சம் கேட்ட கொடூரம்.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் டிஸ்மிஸ்.. ஆக்ஷனில் இறங்கிய அமைச்சர்!

உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும், கடலோர தமிழகத்தில் இயல்பான வெப்பநிலையும் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் நிலவும் சூழலில், கடலோர தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us