விரைவில் வாட்ஸ்அப்பில் இபிஎஃப்ஓ சேவை.. பயன்படுத்துவது எப்படி?
EPFO Services Through WhatsApp | ஊழியரகள் மிக எளிதாக சேவைகளை பெறும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், விரைவில் இபிஎஃப்ஓ சேவை வாட்ஸ்அப் செயலியில் கிடைக்க உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்கள் மிக விரைவாக சேவைகளை பெறும் வகையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இபிஎஃப்ஓ சேவைகளை வாட்ஸ்அப் மூலம் பெறக்கூடிய முக்கிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பேலன்ஸ் தெரிந்துக்கொள்வது உள்ளிட்ட சில சேவைகளை மிக எளிதாக வாட்ஸ்அப் மூலமே பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிலையில், இந்த சேவைகளை வாட்ஸ்அப் மூலம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் மூலமே இபிஎஃப்ஓ சேவைகளை சுலபமாக பெறலாம்
தற்போது பயனர்கள் பிஎஃப் தொடர்பான சேவைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பிஎஃப் சரிப்பார்ப்பது உள்ளிட்ட சேவைகளில் பயனர்கள் சில சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், பிஎஃப் உறுப்பினர்களுக்கான சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த சாட்பாட் வாட்ஸ்அப் செயலியிலே கிடைக்கிறது. இதன் காரணமாக இணையதளத்திற்கு சென்றுன் சேவைகளை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதையும் படிங்க : தொடர்ந்து விலை உயரும் பெட்ரோல், டீசல்.. பொதுமக்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!