No Cost EMI-ல் உண்மையாகவே வட்டி இல்லையா?.. EMI பெறுவதற்கு முன்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
Is No Cost EMI Really Do Not Have Interest | தற்போதைய கால்லட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் மாத தவணை முறையில் பொருட்களை வாங்கும் பழக்கம் பரவலாக காணப்படுகிறது. நோ காஸ்ட் இஎம்ஐ என கூறப்படுவதால் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் மாத தவணை செலுத்தாத குடும்பங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. தங்களுக்கு தேவையான பொருட்களை ஒரே முறையில் பணம் செலுத்தி வாங்க முடியாததால், பலரும் இந்த மாத தவணை முறையில் பொருட்களை வாங்குகின்றனர். நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) என கூறப்படுவதால் பலரும் இந்த மாத தவணை முறையில் பொருட்களை வாங்குகின்றனர். ஆனால், இந்த முறையில் வட்டி விதிக்கப்படுவதில்லை என்பது முற்றிலும் தவறானது. அது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
No Cost EMI-ல் உண்மையாகவே வட்டி இல்லையா?
நோ காஸ்ட் இஎம்ஐ என்றாலே வட்டியிலாத கடன் என தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது அப்படி அல்ல. காரணம், நோ காஸ்ட் இஎம்ஐ கடன் திட்டத்தில், உங்களுக்கான வட்டி தொகையை விற்பனையாளர் விலையிலேயே தள்ளுபடியாக நிறுவனங்கள் கொடுத்துவிடுகின்றன. இந்த முறை இன்ட்ரஸ்ட் சப்வென்ஷன் (Interest Subvention) என அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் பணம் எடுக்க போறீங்களா?.. இந்த 5 அப்டேட்டுகளை செய்ய வேண்டியு கட்டாயம்!
ஜிஎஸ்டி கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும்
நோ காஸ்ட் இஎம்ஐ முறையில் வாங்கப்படும் பொருட்களுக்கு வங்கி ஸ்டேட்மெண்டில் வட்டி தனியாக கணக்கிடப்படும். உங்களுக்கு வட்டிக்கு தள்ளுபடி கிடைத்தாலும், அந்த வட்டிக்கான ஜிஎஸ்டி கட்டணத்தை நீங்கள் கூடுதலாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : Gold Price : 2026 டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை எவ்வளவு இருக்கும்.. ஐசிஐசிஐ கணிப்பு!
பெரும்பாலான சமயங்களில் உடனடி வங்கி தள்ளுபடியையும், மாத தவணை சலுகையையும் ஒன்றாக பயன்படுத்த நிறுவனங்கள் அனுமதி வழங்காது. இந்த சூழலில் நீங்கள் தவணை முறையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நேரடி தள்ளுபடி ரத்தாகவும் அல்லது குறையவும் வாய்ப்பு உள்ளது.
மாத தவணையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை
வங்கிகள் ரூ.199 முதல் ரூ.299 வரை ஒருமுறை வசூலிக்கப்படும் பரிசீலனை கட்டணத்தையும் விதிக்கின்றன. இத்தகைய சிறிய கட்டணங்கள் காரணமாக, ஒரு பொருளை மொத்தமாக பணம் கொடுத்து வாங்குவதை விடவும், மாத தவணை முறையில் வாங்குவது கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.