Gold Price : ஒரே நாளில் ரூ.560 உயர்ந்த தங்கம்.. வெள்ளி விலையில் மாற்றமில்லை!
Gold Price Hiked Silver Price Remain Same In Chennai | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ,560 உயர்வை சந்தித்துள்ளது.
சென்னை, ஜூலை 25 : தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று (ஜூலை 24, 2026) தங்கம் விலை கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று (ஜூலை 25, 2026) உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்காலம்.
கடும் ஏற்ற, இறக்கங்களில் தங்கம் விலை
2024, 2025 ஆகிய ஆண்டுகள் தங்கத்திற்கு மிகவும் சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. காரணம், இந்த இரண்டு ஆண்டுகளும் தங்கம் தொடர் உயர்வை சந்தித்தது. ஆனால், 2026 ஆம் ஆண்டு அப்படி இல்லை. காரணம், 2026 ஆம் ஜனவரி மாதம் ஒரு கிராம் தங்கம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் காரணமாக உருவாகியுள்ள புவிசார் பதற்றங்கள் உள்ளிட்டவை தங்கம் விலை இத்தகைய ஏற்ற, இறக்கங்களை சந்திக்க முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க : தமிழகத்தின் மொத்த கடன்.. பட்ஜெட்டுக்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்!
ஒரே நாளில் ரூ.560 உயர்ந்த தங்கம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்வை சந்தித்து ஒரு கிராம் ரூ.13,300-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240-க்கும், ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.