AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாத படுபாதக அரசு!”.. முதல்வர் விஜய்யை விளாசிய மு.க.ஸ்டாலின்!

MK Stalin Questions CM Vijay: காவல் மரணங்கள் முதல்வர் விஜய் முக ஸ்டாலின் அறிக்கை வாயிலாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. 'Accountability, Apology முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளா?' எனச் சாடியுள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், "காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய் உடனடியாகப் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும்" என மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

“ஆறுதல் சொல்லக் கூட மனமில்லாத படுபாதக அரசு!”.. முதல்வர் விஜய்யை விளாசிய மு.க.ஸ்டாலின்!
மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Jul 2026 11:56 AM IST

சென்னை, ஜூலை 25: தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வரும் காவல் நிலைய மரணங்கள் தொடர்பாகத் தமிழக அரசுக்கும், காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 26 வயது வாலிபர் அருணாச்சலம் பலத்த காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த ஆவேச அறிக்கையைப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: “நான் அமைச்சர்தான்.. ஆனா எனக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கான்!”.. திரையரங்கில் அழுத விவகாரத்தில் அமைச்சர் விக்னேஷ் நெகிழ்ச்சி விளக்கம்!

” எங்கே ஒளிஞ்சிருக்கார்?”:

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது, “தொடரும் காவல் மரணங்கள்… முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, ‘Sorry சொன்னால் போதுமா?’ என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?

Accountability (பொறுப்புடைமை), Apology (மன்னிப்பு) – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணியும் தீவிரமடையும் அரசியலும்:

தூத்துக்குடி பாரில் வேலை செய்து வந்த அருணாச்சலம் என்பவரைக் கடந்த ஜூலை 17-ஆம் தேதி தென்பாகம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காவல் நிலையத்தில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறி சிசிடிவி காட்சிகளைக் காவல்துறை வெளியிட்டபோதிலும், “போலீசார் அடித்தே கொன்றுவிட்டனர்” என உறவினர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

ஏற்கனவே நீட் போராட்டக் கைதுகள், அரசு முகாம்களில் அமைச்சரின் சகோதரர் ஆய்வு நடத்திய சர்ச்சைகள் என த.வெ.க அரசு அடுத்தடுத்து விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த லாக்கப் மரண விவகாரம் அரசின் மீது கடுமையான அரசியல் அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் CM விஜய்.. காவிரிப் பிரச்சினைக்கு நேரடி பேச்சுவார்த்தை தீர்வாகுமா?

உயிரிழந்த வாலிபரின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே அடுத்தகட்டச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த நேரடித் தாக்குதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Follow Us