AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரையில் கொளுத்திய வெயில்.. கரூரில் 6.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவான வெப்பநிலை..

ஜூலை 25, 2026: தமிழகத்தில் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 39 டிகிரி செல்சியஸ், நாகையில் 38.7 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸ், கரூரில் 38.5 டிகிரி செல்சியஸ், வேலூர் மற்றும் திருத்தணியில் தலா 38.1 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38 டிகிரி […]

மதுரையில் கொளுத்திய வெயில்.. கரூரில் 6.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவான வெப்பநிலை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 25 Jul 2026 06:25 AM IST

ஜூலை 25, 2026: தமிழகத்தில் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 39 டிகிரி செல்சியஸ், நாகையில் 38.7 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸ், கரூரில் 38.5 டிகிரி செல்சியஸ், வேலூர் மற்றும் திருத்தணியில் தலா 38.1 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 36.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

கரூரில் 6.3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவான வெப்பநிலை:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரூரில் இயல்பை விட 6.3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரக்கூடிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசின் அதிரடி நகர்வு.. அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறிய அந்த வார்த்தை!

அதேநேரத்தில், ஜூலை 28ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை:

சென்னையைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்… பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மழையைப் பொறுத்தவரையில், ஜூலை 25ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூலை 30ஆம் தேதி வரை இதே நிலை தொடரும் என்றும், ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us