AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் இந்த மாநிலத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்.. எங்கு தெரியுமா?

Petrol and Diesel Price Too High In This State | மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் இந்த மாநிலத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகம்.. எங்கு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 May 2026 00:14 AM IST

சென்னை, மே 29 : இந்தியாவில் தற்போது மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் எந்த மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் எந்த மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகம்?

மேற்கு ஆசியா போரின் விலைவாக ஹோர்முஸ் நீரிணை (Strait Of Hormuz) மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகளில் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் ஹோர்முஸை கடந்த செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீடல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

இதையும் படிங்க : எத்தனால் கலந்த பெட்ரோல் விரைவில் அறிமுகம்?.. ரூ.20 வரை குறையும் பெட்ரோல் விலை?

பிப்ரவரி 28, 2026 முதலே கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கிய நிலையில், இரண்டு மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், மே மாதம் தொடங்கியது முதலே பலமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் அதிக விலைக்கி விற்கப்படும் பெட்ரோல்

மே மாதத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ளது.

  • டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.12-க்கும், டீசல் லிட்டர் ரூ.95.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.21-க்கும், டீசல் லிட்டர் ரூ.97.83-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113.51-க்கும், டீசல் லிட்டர் ரூ.99.82-க்கும் விற்பனை செய்யப்படுகிறது
  • ஐதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.115.62-க்கும், டீசல் லிட்டர் ரூ.103.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : நிதி பாதுகாப்பு வேண்டுமா?.. அப்போது இந்த மினிமலிச கொள்கைகளை பின்பற்றுங்கள்!

இந்த நிலையில் இந்தியாவிலேயே ஆந்திர பிரதேசத்தில் தான் அதிக விலைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.117.25-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.104.96-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us