AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிதி பாதுகாப்பு வேண்டுமா?.. அப்போது இந்த மினிமலிச கொள்கைகளை பின்பற்றுங்கள்!

How To Get Stable Economy | நிலையான மற்றும் பாதுகாப்பான பொருளாதரத்தை கொண்டு இருக்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக உள்ளது. இந்த நிலையில் தான், பாதுகாப்பாக பொருளாதாரத்தை பெற மினிமலிச கொள்கைகள் உதவி செய்கின்றன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 May 2026 14:40 PM IST
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே நிதி பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நிதி பாதுகாப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க முடியும். இதற்கு மினிமலிசம் முறை மிகவும் முக்கியமாக உள்ளது. இந்த நிலையில், நிதி பாதுகாப்பை மேம்படுத்த உதவும் சில மினிமலிச கொள்கைகள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். 

1 / 5
30 நாட்கள் விதி : மினிமலிசத்தில் மிக முக்கியமாக உள்ளது தான் இந்த 30 நாட்கள் விதி. அதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் 30 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று இந்த விதி கூறுகிறது. அந்த 30 நாட்களுக்கு பிறகும், உங்களுக்கு அந்த பொருளின் தேவை உள்ளது என்றால் நீங்கள் அதனை வாங்கிக்கொள்ளலாம். இதன் மூலம் அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்குவது குறையும்.

2 / 5
தரம் முக்கியம் : எண்ணிக்கையை விட தரம் முக்கியம் என மினிமலிச கொள்கை கூறுகிறது. அதாவது, மலிவான விலைக்கு 10 ஆடைகள் எடுப்பதற்கு பதிலாக தரமான ஆடைகள் அதிக விலைக்கு வாங்குவது சிறந்தது என கூறப்படுகிறது. காரணம், மலிவான உடைகள் மிக விரைவில் கிழிந்துவிடும். ஆனால், தரமான உடைகளை வாங்கும்போது அது நீடித்து உழைக்கும். இதன் மூலம் அடிக்கடி உடைகளை வாங்கி பணத்தை செலவு செய்ய தேவையில்லை. 

3 / 5
வரவு செலவு திட்டம் : சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவு செய்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்தவுடன் என்ன என்ன செலவுகள் உள்ளது, எதற்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பது குறித்து ஒரு விரிவான திட்டத்தை வடிவமைக்க வேண்டும். பிறகு மாத இறுதியில் திட்டமிட்டபடி பணம் செலவாகியுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

4 / 5
அவசரகால நிதி : அவசரகால நிதி என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் உடல்நல குறைப்பாடு, வேலை இல்லாமல் போவது உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே எப்போது அவசர தேவைகளுக்காக பணத்தை சேமித்து வைக்க வேண்டும். உதாரணமாக மூன்று மாத சம்பளத்தை அவசரகால நிதியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

5 / 5
Follow Us