AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு: நவ. 22-இல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

Rising Asia Cup 2026 Schedule : ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரில் நடைபெறும் இந்தத் தொடரில், இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால், 2026 நவம்பர் 22 அன்று இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு: நவ. 22-இல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்
Ind Vs Pak (3)
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 24 Oct 2026 22:28 PM IST

ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2026 (Asia Cup Rising Stars) தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரில் நடைபெறும் இந்தத் தொடரில், இந்தியா , பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால், 2026 நவம்பர் 22 அன்று இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இது இந்தத் தொடரின் இரண்டாவது பதிப்பாகும். இந்த தொடர் 2026 நவம்பர் 19 முதல் 29 வரை, தோஹாவில் உள்ள இரண்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பில் பாகிஸ்தான் ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது. எனவே, இந்த முறை நடப்பு சாம்பியனாக அந்த அணி களமிறங்குகிறது.

50 ஓவர் போட்டி

கடந்த ஆண்டு டி20 வடிவத்தில் நடைபெற்ற இந்தத் தொடர், இந்த முறை 50 ஓவர் ஒருநாள் போட்டி வடிவத்தில் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

  • ஏ பிரிவில் இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.
  • பி பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடம் பெற்றுள்ளன.

லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். மொத்தம் 12 லீக் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

இதையும் படிக்க : IND vs NZ: 300வது டி20யில் களமிறங்கிய இந்தியா.. 200வது வெற்றியை பதிவு செய்யுமா?

இந்தியா –  பாகிஸ்தான் அணியின் போட்டி

  • அதன் படி 2026 நவம்பர் 20 அன்று இந்தியா ஏ – நேபாளம் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும்
  • அதனைத் தொடர்ந்து 2026 நவம்பர் 22 அன்று இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும்
  • மேலும் நவம்பர் 24, 2026 அன்று இந்தியா ஏ – யுஏஇ அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 11.30 மணிக்கு தொடங்கும்
  • இந்தியா – பாகிஸ்தான் போட்டி, தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. லீக் சுற்று நவம்பர் 24 அன்று நிறைவடைகிறது. இறுதிப் போட்டி நவம்பர் 29 அன்று வெஸ்ட் எண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க : IND vs NZ: டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்த ஷ்ரேயாஸ் ஐயர்.. பிளேயிங் லெவனில் சூர்யவன்ஷிக்கு இடம்!

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதால், நவம்பர் 22 போட்டி இந்தத் தொடரின் மிகப்பெரிய ஈர்ப்பாக மாறியுள்ளது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் ஏ அணியை இந்தியா ஏ அணி எப்படி எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இரு அணிகளும் தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால், இறுதிப் போட்டியில் மீண்டும் மோதும் வாய்ப்பும் உள்ளது.

Follow Us